Breaking News

த.தே.மக்கள் முன்னணி வேட்பாளர்களின் பின்னணி என்ன?

தமிழ் அரசியலில் மாற்றம்
வேண்டும் பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் தமதுபிரதிநிதிகளைத் தெரிவுசெய்யும் நாள் நெருங்கிவிட்டது. தமிழ் மக்கள் தமதுதேசியத்தைக் காப்பாற்றவேண்டி கட்டாயத்தில் உள்ளனர். தாயகம்,தேசியம்,சுயநிர்ணயம் என்ற கோட்பாட்டை தமது கொள்கையாகக் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ’ கட்சியின் யாழ்ப்பாண வேட்பாளர்கள் பற்றி சிறு அறிமுகம்... 

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்- 

தலைவர் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிபொதுச் செயலாளர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மைந்தன். இலங்கையில் முதலாவதுதமிழ் அரசியல் கட்சியான அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியைஉருவாக்கிய ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பேரன். தனதுபாடசாலைக்கல்வியை கொழும்புறோயல் கல்லூரியிலும் சர்வதேசபாடசாலையிலும் சட்டக் கல்வியை லண்டனிலும் மேற்கொண்டவர். 

சட்டத்தரணியாக சிலகாலம் கடமையாற்றியவர். தற்போது தனது சட்டத்தொழிலை முழுமையாகக் கைவிட்டு முழுநேர அரசியல் பணியை ஆற்றுகின்றார். 2001 ஆம் ஆண்டுதொடக்கம் 2010 வரைதமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பாராளுமன்ற உறுப்பினராகவும் கடமையாற்றினார். தமிழீழ விடுதலைப் புலிகளின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தமையால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சர்வதேசவிவகாரக் குழுவின் உபதலைவராகச் செயற்பட்டார். மக்களின் சுயநிர்ணய உரிமையைப்பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதற்காக உயரிய அர்ப்பணிப்பைக் கொண்டவர். 

2009 மே 18 இற்குப் பின்புதமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசிய அரசியலைக் கைவிட்டு சரணாகதி அரசியலுக்கு செல்லும் முடிவினைஎடுத்தபோது அதிலிருந்து வெளியேறிதாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்றகொள்கையில் தெளிவாக இருந்த செல்வராசாகஜேந்திரன், பத்மினிசிதம்பரநாதன் ஆகியோர் இணைந்து தமிழ்த் தேசியமக்கள் முன்னணியை உருவாக்கினார். 

செல்வராசாகஜேந்திரன்-  
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசியமக்கள் முன்னணி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வியாபார நிர்வாகமானி பட்டதாரியான செல்வராசா கஜேந்திரன் வடமராட்சி மண்ணைப்பூர்வீகமாகக் கொண்டவர், வீரம் நிறைந்த வன்னிமண் இவரை வளர்த்தெடுத்தது. யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தபோது தாயகம்,தேசியம்,சுயநிர்ணயம் என்பனவற்றை வலியுறுத்தி பல்கலைக்கழக சமூகத்தால் பல நூறு மாணவர்கள் பொங்குதமிழ் நிகழ்வை ஏற்பாடு செய்ய முற்பட்டபோதுஅதில் முன்னணி மாணவராகத் திகழ்ந்தார். 

யாழ்.பல்கலைக்கழகமாணவர் ஒன்றியத் தலைவராக இருந்தபோது தமிழ் மாணவர்களினதுகல்விஉரிமைகள்,தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் வேண்டிப் பல போராட்டங்களை நடத்தினார். 2004 ஆம் ஆண்டு பல்கலைக்கழகக் கல்விநிறை வடைந்தபின் தமிழீழவிடுதலைப் புலிகளின் தலைமையினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கொண்டுவரப்பட்டார். 

2004 ஆம் ஆண்டுபாராளுமன்றத் தேர்தலில் யாழ்.மாவட்டத்தில் அதிகூடியவிருப்புவாக்குகளைப் பெற்று தெரிவானார். 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2010 ஆம் ஆண்டுவரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெளிவிவகாரக் குழுவிலும் அங்கம் வகித்தவர். 

2009 ஆம் ஆண்டுமே 18 இற்குப் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ்த் தேசியக் கொள்கையிலிருந்து விலகமுற்பட்ட போது அக்கொள்கையில் இறுக்கமாக இருந்த இவரையும் பத்மினி சிதம்பரநாதனையும் கூட்டமைப்பினர் வெளியேற்றியிருந்தனர். 

இதன் பின் இதே ஆண்டு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துடன் இணைந்து தமிழ்த் தேசியமக்கள் முன்னணியை உருவாக்கி அதன் பொதுச் செயலாளராகக் கடமையாற்றுகின்றார். தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் போராட்டங்கள் பலவற்றை ஒழுங்கு செய்தவர் இவரேயாவார். ஒரேநேரத்தில் பலபணிகளைப் புரியும் ஆற்றலைக் கொண்டவர். 

விஸ்வலிங்கம் மணிவண்ணன்-

சட்டத்தரணி,தேசியஅமைப்பாளர்,ஊடகப் பேச்சாளர்,தமிழ்த் தேசியமக்கள் முன்னணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் கொக்குவிலைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புகழ் பூத்தசட்ட அறிஞர்கள் குடும்பத்தில் பிறந்தவர். தந்தை,சகோதரன்,சகோதரி எனப் பலர் அவரது குடும்பத்தில் சட்டத் தொழில் புரிகின்றனர். யாழ்.இந்துக் கல்லூரியில் பாடசாலைக் கல்வியையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வியையும் மேற்கொண்டவர். 

இன்றுயாழ்ப்பாண மாவட்டத்தின் புகழ்பெற்ற சட்டத்தரணியாக மிளிர்கின்றார். மக்கள் பிரச்சினைகளில் மிகுந்த அக்கறை கொண்டவர். சுன்னாகம் கழிவு ஒயில் விவகாரத்தில் ஏனைய சட்டத்தரணிகளுடன் இணைந்து மக்களுக்காக நீதிமன்றத்தில் வழக்காடியவர். தமிழ்த் தேசியமக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளராகவும் ஊடகச் பேச்சாளராகவும் கடமையாற்றுகின்றார். இலக்கில் தெளிவும்,கொள்கையில் உறுதியும் உடையவர். தமிழ்த் தேசிய அரசியல் நெருக்கடிகளை புலமை நின்றுபார்க்கும் ஒருசிலரில் இவரும் ஒருவராவார். 

பத்மினி
சிதம்பரநாதன்-

நாடகமும் அரங்கியலிலும் நாடறியப்பட்ட இவர் பொங்கு தமிழால் உலகஅரங்கில் அறியப்பட்டார். முன்னர் பாராளுமன்ற உறுப்பினராக செயற்பட்டவர். தமிழ்த் தேசியத்தின் மீதானபற்றால் அவரதுஅரசியல் பயணத்தை முடக்குவதற்கு பலர் முயன்றபோதும் அதைக் கண்டு பயந்துபின்நோக்காது தொடர்ந்தும் தன் பயணத்தை தொடர்கின்றார். பெண்கள்,குழந்தைகள் மீதான அக்கறையும் அவர்களின் மேம்பாட்டிற்காக உழைக்கும் பாங்கும் உடையவராக மிளிர்கின்றார். 

அமிர்தலிங்கம் இராசகுமாரன்-

முன்னாள் தலைவர் - யாழ்.பல்கலைக்கழகஆசிரியர் சங்கம் அமிர்தலிங்கம் இராசகுமாரன் பருத்தித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். யாழ்.பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழித்துறையின் சிரேஷ்ட விரிவுரையாளராகக் கடமையாற்றும் இவர் மிகத் துடிப்புள்ள தமிழ்த் தேசிய வாதியாவார். யாழ்.பல்கலைக் கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தபோது முழு பல்கலைக்கழகச மூகத்தையும் இணைத்து பலபோராட்டங்களை முன்னெடுத்தவர். 

இதற்காகப் பலதடவைகள் படையினரால் விசாரிக்கப்பட்டவர். இனப்படு கொலைகளுக்கு சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கோரிசிவில் சமூகத்தையும் இணைத்து இவர் தலைமையேற்று நடத்திய போராட்டம் உலகத்தையே ஒருகுலுக்குகுலுக்கியிருந்தது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு,தமிழ்த் தேசியஅ ரசியலை மிகமோசமாகக் கீழிறக்குகின்றது. இந்நிலை தொடர்ந்தால் முழுத் தமிழினமும் அழியவேண்டியதுதான் என்பதைஅறிவு ரீதியாக உணர்ந்துதமிழ்த் தேசியமக்கள் முன்னணியுடன் தன்னை இணைத்துக் கொண்டார். இவரது வருகை தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கு பாரியபலத்தினைத் தந்திருக்கின்றது. 

சின்னமணி கோகிலவாணி-

யுத்தத்தின் கோரங்களை தாங்கிய பூமியான கிளிநொச்சி மண்ணின் மகள். விடுதலைப் போராட்டத்தில் 14 வருடங்கள் நேரடிப் பங்களிப்பு ஆற்றியவர். போர்க் குற்றசாட்சியத்தில் சாட்சியம் அளித்ததுடன் ஏனையவர்களையும் அதில் பங்குபெறவைத்தார். 10 வருடங்களுக்கு மேலாக அரசசார்பற்ற நிறுவனத்தில் பணியாற்றியவர். தனது கிராமமான மருதநகர் மகளிர் குழுவில் இருந்து சேவைஆற்றி வருகின்றார். இதே வேளை இவர் மனித உரிமை செயற்பாட்டாளராகவும் உள்ளார். சர்வதேச பெண்கள் தலைமைத்துவ ஒருமாத செயலமர்விற்காக அமெரிக்காவிற்குச் சென்று கற்றவர். 

உலகலாவியரீதியில் 90 நாடுகளில் இருந்து வருகை தந்த பெண்கள் அக் கற்கைநெறியில் இணைந்து கொண்டனர். 2012ஆம் ஆண்டு நேபாளம் சென்று இன முரண்பாடுகளை மாற்றியமைத்தல் என்ற செயலமர்வில் 3 வாரங்கள் பங்குபற்றினார். அவர்கள் மத்தியில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பெண்களின் நிலையை எடுத்துக் கூறினார். 


ஜெயரட்ணம் வீரசிங்கம்-

மானிப்பாயைபிறப்பிடமாகக் கொண்டவர். நவாலிசென்.பீற்றர்ஸ் பாடசாலையில் தனது ஆரம்பக் கல்வியை கற்றபின் மானிப்பாய் இந்துக் கல்லூரியின் மைந்தன் ஆனார். பல்கலைக்கழக எழுதுவினைஞரான இவர் பல்கலைக்கழக மாணவர்களின் குறிப்பாக வெளிமாவட்ட மாணவர்களின் தங்குமிட வசதியை ஏற்படுத்திக் கொடுக்க அவர் என்றும் உறுதுணையாக இருக்கிறார். 

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிதி உதவிகளை வழங்குவது மட்டுமல்ல அவர்களுக்கான சுயதொழில் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.சமூகத் தொண்டினால் ஏற்பட்டஆர்வம் காரணமாக தமிழ் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும் எனஆர்வம் எழுந்த அதற்கு தமிழ்த் தேசியமக்கள் முன்னணி வழிசமைத்தது. 

தேவதாசன் சுதர்சன் -

குருநகரைபிறப்பிடமாகக் கொண்ட இவர் புனிதபத்திரிசியார் கல்லூரியின் மாணவர் குருநகர் பாடுமீன் கழகத்தின் உபதலைவராகத் தன்னை சமூகத்திற்காகப் பணிறாற்றிவரும் ஒருதுடிப்புள்ள இளையவன். தன் இனத்தின் அவலங்களை உணர்ந்து அதனைத் தீர்க்க எண்ணங் கொண்டவர். அதற்கான வழியை தேடினார். தமிழ்த் தேசியமக்கள் முன்னணி அதற்கு பொருத்தமான அரசியல் செயற்பாட்டு அணிஎன்பதனை தீர்மானித்து அதனுடன் தன்னை இணைத்துக் கொண்டார். 


ஆனந்தி சிவஞானசுந்தரம் 

இவர் ஒருகலைப்பட்டதாரி. கலைகள் மிளிரும் அளவெட்டி மண்ணின் சொந்தக்காரி. யாழ்.இராமநாதன் பெண்கள் கல்லூரியில் அதிபராகக் கடமையாற்றினார். தனது பாடசாலை மாணவர்களுக்கு மட்டு மல்ல சமூகத்தில் உள்ள ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவுபவராக இருந்திருக்கின்றார். மாணவர்கள் மீதான இவரது அக்கறை மக்கள் மீதானஅக்கறையாக பரிணமித்து அரசியல் ரீதியாக பணியாற்ற ஆர்வம் கொண்டார். பல இன்னல்களை அனுபவித்த இனத்திற்கு ஒரு ஒளிகீற்றாய் தமிழ்த் தேசியமக்கள் முன்னணி அமையும் என்ற நம்பிக்கையில் அதனுடன் கைகோர்த்து தனது அரசியல் தடத்தை முன்வைத்துள்ளார்.

திருநாவுக்கரசு சிவகுமாரன்

நயினாதீவினை பிறப்பிடமாகக் கொண்டவர் கோப்பாயை தனதுவாழ் விடமாகக் கொண்டயாழ். இந்துக் கல்லூரியின் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார். தீவகத்தில் நிறைவாக வாழ்ந்த மக்கள் யுத்தத்தினால் சிதறப்பட்டு பல்வேறு பிரதேசங்களில் வாழ்வதால் தீவுகம்; தீயசக்திகளின் ஆளுகைக்குள் உட்பட்டது. எனவே தீவகத்தை மீண்டும் தீபமாக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு வடிவம் கொடுக்கக் கூடிய ஒரே ஒருஅமைப்பாக தமிழ்த் தேசியமக்கள் முன்னணி உள்ளதால் அதில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடர்கின்றார்.