Breaking News

காணாமற்போனோர் தொடர்பான விசாரணைக்கான வெலிஒயா பிரதேச அமர்வு இன்று

காணாமற்போனவர்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்கு ழுவின் அமர்வு இன்று (21) வெலிஒயா பிரதேச செயலகப் பிரிவில் இடம்பெறவுள்ளது.

பதவிய பிரதேச செயலகத்தில் நேற்று (19) நடைபெற்ற அமர்வின்போது மக்களின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதாக ஆணைக்குழுவின் செயலாளர் எச்.டபிள்யூ.குணதாஸ தெரிவித்துள்ளார்.

புதிதாக 72 முறைப்பாடுகளும் இதன்போது பதிவு செய்யப்பட்டுள்ளன. காணாமற்போனோர் தொடர்பில் வெலிஒயா மக்களிடமிருந்து 60 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி
ஆணைக்குழுவின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு ஏற்கனவே யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அமர்வுகளை நடத்தியிருந்தது.