Breaking News

மஹிந்த – மைத்திரி ஆட்சியை மீண்டும் அமைப்போம்! ஒன்றிணைந்த எதிர்க்கட்சி ஆருடம்

தேசிய அர­சாங்­கத்தின் மோசடி ஆட்­சியின் இறுதி அத்­தி­யா­யங்கள் இப்­போது அரங்­கேறி வரு­கின்­றன. எதிர்வரும் தேர்­தலின் பின்னர் மீண்டும் மஹிந்த –மைத்­திரி ஆட்­சியை அமைப்போம் என எதிர்க்­கட்சி தெரி­வித்­தது.



மஹிந்­தவை வெற்­றி­பெறச் செய்­வதா அல்­லது வீழ்த்­து­வதா என்­பதை மக்­களே தீர்­மா­னிக்க வேண்டும். மாறாக சர்­வ­தேசம் தீர்­மா­னிக்க முடி­யாது எனவும் எதிர்க்கட்சி குறிப்­பிட்­டது. மஹிந்த ஆத­ரவு அணி­யி­னர் நேற்று அப­ய­ராம விகா­ரையில் செய்­தி­யாளர் சந்­திப்­பொன்­றினை நடத்­தினர். இனத்­போதே மஹிந்த ஆதரவு அணியினர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டனர். 

இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர் வாசு­தேவ நாண­யக்­கார தெரி­விக்­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் பலம் நாளுக்கு நாள் கூடிக்­கொண்டே வரு­கின்­றது. கட்­சியை பிள­வு­ப­டுத்தி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை தனிக் கட்­சி­யா­கவும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியை தனிக் கட்­சி­யா­கவும் மாற்­றி­ய­மைக்க பலர் திட்டம் தீட்­டினர். ஆனால் அவர்கள் கண்ட கனவு நன­வா­க­வில்லை. ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி எதிர்­வரும் பொதுத் தேர்­தலில் பல­மான கூட்­ட­ணி­யாக கள­மி­றங்க தயா­ராகி விட்­டது. ஐக்­கிய தேசியக் கட்சி பண பலத்­தையும், அமைச்சு அதி­கா­ரங்­க­ளையும் தன்­வசம் வைத்­துக்­கொண்டு மக்­க­ளுக்கு இலஞ்சம் கொடுக்க தயா­ராகி வரு­கின்­றது.

இப்­போதே அவர்­க­ளது தேர்தல் வியா­பாரம் ஆரம்­ப­மா­கி­விட்­டது. ஆனால் நாம் எமது மக்கள் பலத்தை மட்டும் நம்­பியே இம்­முறை களத்தில் இறங்­கு­கின்றோம். எமது வெற்­றியை தட்­டிப்­ப­றிக்க யார் முயற்­சித்­தாலும் நாம் அவை அனைத்­தையும் தாண்டி மிகப்­பெ­ரிய வெற்­றியை பெறுவோம்.

விமல் வீர­வன்ச

செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்­ட முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச கருத்து தெரி­விக்­கையில்,

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியில் இரு பிரி­வு­களை ஏற்­ப­டுத்தும் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. ஆயினும் அவற்­றுக்கு முற்­றுப்­புள்ளி வைத்து கட்­சியை மீண்டும் ஒரு கூட்­ட­ணி­யாக்கி இம்­முறை தேர்­தலை எதிர்­கொள்ள நாம் தயா­ரா­கி­யுள்ளோம். வெற்­றியை நோக்­கிய எமது பய­ணத்தில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­தவை முதன்­மைப்­ப­டுத்தி களத்தில் இறங்­கி­யுள்ளோம். மீண்டும் மஹிந்த ஆட்­சியை அமைப்­பதே எமது ஒரே நோக்­க­மாகும்.

மேலும் கடந்த காலத்தில் எமது அர­சாங்­கத்தை மோச­டி­கார அர­சாங்­க­மாக விமர்­சித்­த­வர்கள் இன்று மிகவும் மோச­மான ஆட்­சியை நடத்­து­கின்­றனர். நல்­லாட்சி பற்றி பேசி­ய­வர்கள் இன்று அரா­ஜக ஆட்­சியை நடத்­து­கின்­றனர். எமது ஆட்­சியில் நிதி மோச­டிகள், குற்றச் செயல்கள், ஊடக அடக்­கு­முறை தொடர்பில் பேசி­ய­வர்கள் இன்று என்ன செய்­கின்­றனர் என்­பது வெளி­யா­கி­யுள்­ளது.

இலங்­கையின் நிதித்துறையில் மிகப்­பெ­ரிய ஊழல் மோசடி இம்­முறை ஐக்­கிய தேசியக் கட்­சியின் ஆட்­சியில் நடந்­துள்­ளது. இது மிகப்­பெ­ரிய கறுப்புப் புள்­ளி­யா­கவே பதி­வா­கி­யுள்­ளது. அதேபோல் இந்த அர­சாங்கம் ஊட­கங்­களை மிகவும் ஏளனமாக நடத்­து­கின்­றது. ஊட­க­வி­ய­லா­ளர்கள் சுயா­தி­ன­மாக செயற்­பட முடி­யாது உள்­ளது. அர­சாங்­கத்­துக்கு எதி­ராக ஏதேனும் செய்­திகள் வெளி­யா­கினால் நேர­டி­யாக பிர­த­மரின் தலை­யீ­டுகள் இடம்பெறுகின்றன. 

ஆகவே அடக்­கு­மு­றை­களை கையாண்டு மக்­களை ஏமாற்றி ஆட்­சியை கைப்­பற்ற ஐக்­கிய தேசியக் கட்சி முயற்­சிக்­கின்­றது. ஆனால் ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஆட்­சியை அமைக்க முடி­யாது. அவர்­களை தலை­தூக்க நாம் அனு­ம­திக்க மாட்டோம். எனவே மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகி­யோரின் கூட்­ட­ணியே நாட்டை பலப்­ப­டுத்தும். அந்த ஆட்­சியை நாம் இம்­முறை ஏற்­ப­டுத்­துவோம் என்றார்.

பந்­துல குண­வர்­தன.

இதில் கலந்­து­கொண்ட முன்னாள் அமைச்சர் பந்­துல குண­வர்­தன தெரி­விக்­கையில்,

இந்த நாட்­டுக்கு மைத்­திரி –ரணில் தலை­மை­யி­லான ஆட்சி பொருத்­த­மில்லை. மைத்­திரி –மஹிந்த ஆட்­சியே இந்த நாட்­டுக்கு பொருத்­த­மா­னது. அந்த ஆட்­சியை உரு­வாகக் நாம் முயற்­சித்து வரு­கின்றோம்.

கடந்த ஆறு மாதங்­களில் இந்த நாட்டில் பல மோச­டிகள் இடம்­பெற்­றுள்­ளன. அதில் மத்­திய வங்கி ஊழல் மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். மக்­க­ளையும், ஏனைய கட்­சி­க­ளையும் ஏமாற்றி இந்த ஊழலை ஐக்­கிய தேசியக் கட்சி செய்­துள்­ளது. இலங்­கையின் அர­சியல் வர­லாற்றில் இவ்­வா­றா­ன­தொரு நிதி மோசடி வேறு எப்­போ­திலும் நடை­பெற்­ற­தில்லை. அந்த சாத­னை­யையும் ஐக்­கிய தேசியக் கட்சி படைத்­துள்­ளது.

எனவே மீண்டும் நாட்டில் ஜன­நா­யக ஆட்­சியை கொண்­டு­வர வேண்டும். மக்கள் விரும்பும் நல்­லாட்­சியை மீண்டும் உரு­வாக்க வேண்டும். அதற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் நாம் மேற்­கொண்டு வரு­கின்றோம். மீண்டும் மஹிந்த ராஜபக் ஷ தலை­மையில் நாட்டில் நல்­லாட்­சியை ஏற்­ப­டுத்தி மஹிந்த –மைத்­திரி அர­சாங்­கத்தை ஏற்­ப­டுத்­துவோம் என்றார்.

உதய கம்­மன்­பில

இந்த செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்­டி­ருந்த தூய்­மை­யான ஹெல உறு­மைய அமைப்பின் தலைவர் உதய கம்­மன்­பில தெரி­விக்­கையில்,

ஐக்­கிய தேசியக் கட்சி நடத்­தி­வரும் நல்­லாட்­சியின் இறுதி அத்­தி­யா­யங்கள் இன்று அரங்­கே­றிக்­கொண்­டி­ருக்­கின்­றன. தேசிய அர­சாங்­கத்தில் பல கூட்டுக் கட்­சிகள் கைகோர்த்­தன. ஆனால் இன்று அவை அனைத்தும் தேசிய அர­சாங்­கத்தின் கூட்டில் இருந்து வில­கி­யுள்­ளன. கடந்த ஜனா­தி­பதி தேர்­தலின் போது இந்த அர­சாங்­கத்­துக்கு 62 இலட்சம் வாக்­குகள் கிடைத்­தது. இந்தக் கணக்­கையே இப்­போதும் வைத்­துக்­கொண்டு ஐக்­கிய தேசியக் கட்சி வெற்றிக் கனவில் உள்­ளனர். 

ஆனால் இந்த கூட்­ட­ணியில் இருந்து இம்­முறை தமிழ்த தேசியக் கூட்­ட­மைப்பு, மக்கள் விடு­தலை முன்­னணி, ஜன­நா­யகக் கட்சி, ஜாதிக ஹெல உறு­மைய ஆகிய பிர­தான கட்­சிகள் வெளி­யே­றி­விட்­டன. இதில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு 7 இலட்சம் வாக்­கு­க­ளுடன் வெளி­யே­றி­விட்­டது, மக்கள் விடு­தலை முன்­னணி 5 இலட்சம் வாக்­கு­க­ளு­டனும், ஜன­நா­யகக் கட்சி 2 இலட்சம் வாக்­கு­க­ளு­டனும், ஜாதிக ஹெல உறு­மைய 1 இலட்சம் வாக்­கு­க­ளு­டனும் வெளி­யே­றி­யுள்­ளனர். 

அதேபோல் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் சுமார் 3இலட்சம் வாக்­கு­களும் இம்­முறை எமக்கே வந்­த­டைந்­துள்­ளது. ஆகவே 62 இலட்சம் வாக்­குளில் வெளி­யே­றிய கூட்­டணிக் கட்­சி­களின் 18 இலட்சம் வாக்­குகள் வெளி­யே­றினால் அவர்­க­ளுக்கு 44 இலட்சம் வாக்­கு­களே உள்­ளது. இதில் கடந்த ஆறு மாத­கா­லத்தில் இந்த அர­சாங்­கத்தை வெறுத்­துள்ள மக்­களின் எண்­ணிக்கை 1௦ இலட்சம் அளவில் உள்­ளனர். அவர்­க­ளது வாக்­கு­களும் எமது பக்கம் சேரும். ஆகவே இம்­முறை ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் மோசமானதொரு தோல்வியை சந்திக்கும். அதேபோல் நாம் இம்முறை வரலாறு காணாத வெற்றியை பெறுவோம்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை தேர்தலில் களமிறக்குவதா, இல்லையா என்பதை தெரிவு செய்வது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே. அதேபோல் மஹிந்தவை வெற்றிபெற வைப்பதா அல்லது தோல்வியுற வைப்பதா என்பதை மக்கள் தான் தீர்மானிக்க வேண்டும். இதில் சர்வதேச நாடுகள் தலையிட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மஹிந்தவின் அரசியலை தீர்மானிக்கும் வேலையினை நோர்வே, கனடா போன்ற நாடுகள் செய்கின்றன. சர்வதேச தலையீடுகளை நாம் அனுமதிக்கப் போவதில்லை எனக் குறிப்பிட்டார்.