தேசியத்தை தேடி நிற்கும் தமிழர்தரப்பு - சு.நிஷாந்தன்
பல நூற்றாண்டு காலமாக ஈழ மண்ணில் வாழ்ந்துவந்த
தமிழத் தேசிய இனத்தின் உரிமைகளை சிங்களப் பேரினவாதிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வீரமுடன்மாடிய எமது இனத்தின் உரிமைப் போரா ளிகளானத்தும் மூத்த தலைமைகளினதும் தமிழ்த் தேசியவாதம் எங்கே?
வரலாற்றுகாலம் தொட்டு இந்த நாட்டில் வாழ்ந்துவந்த தமிழ்த் தேசிய இனத்தின் சுதந்திரக் காற்றை சிங்களப் பேரினவாதம் பறிக்க முற்பட்ட போதே தமிழத் தேசியம் என்ற பதம் எம்மினத்தை பற்றிக்கொண்டது.
வரலாற்று ஆய்வாளர்களின் கருத்துபடி இலங்கையில் பூர்வீகமாக தமிழர்களே வாழ்ந்து வந்துள்ளனர் என்பதுடன் இது சிங்கள நாடாக ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த நாடு தமிழர்களின் நாடே என உறுதிப்படக் கூறியுள்ளனர்.
உண்மையில் இலங்கை என்பது சங்க காலத்துக்கு முற்பட்ட அதாவது, கி.மு 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உலகில் மாபெரும் தமிழர் சாம்ராஜ்சியமாகக் காணப்பட்ட குமரி கண்டத்தின் ஒருபகுதி என இந்திய பெருந்தேசத்தில் வாழ்ந்த தொல் பொருள் ஆய்வாளர்களும், உலகின் பிரபல்யமான தொல்பொருள் ஆய் வாளர்களும் வரலாற்று ஆய்வுகளின் மூலம் தெளிவாக நிருபித்துள்ளனர்.
அதற்கான ஆதாரங்கள் தற்பொழுது உலகளாவிய ரீதியிலும், சமூக வலையத்தளங்களிலும் எண்ணிலடங்காதவாறு காணப்படுகின்றன.
எனவே, இலங்கை என்பது தமிழர் நாடு என்பதை எவரும் மறுக்க முடியாது. ஆனால், கி.பி. இந்த நாட்டில் வந்தேறுகுடிகளாக வந்த சிங்கள இனம்தான் இன்று இலங்கையை ஆட்சிசெய்கின்றது.
சிங்கள இனவாதிகளிடமிருந்து தம் முடைய உரிமைகளைப் பெற்றுக் கொள்ள தோற்றம் பெற்றதே ஆயுதக் குழுக்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் வெறுமனே சிங்களவர்களுக்கு எதிராகத் தோற்றம் பெற்றவர்கள் அல்லர்.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு முன்னர் இந்த நாட்டில் மிகப் பெரிய உரிமைப் போராட்டம் நடந்தேறியது அரசியல் ரீதியான உரிமைப் போராட்டத்தைத் தீவிரவாதமாக கருதித் தமிழர்களை அழித்ததன் விளைவே விடுதலை களமாட புறப்பட்ட விடுதலைப் புலிகளின் எழுச்சி.
ஆங்கிலேய காலனித்துவ ஆட்சிக்காலத்தில் இந்த நாட்டின் வளங்களை தம் தேசத்துக்குச் சுரண்டப்பட்டபொழுது அதற்கெதிரகா முதன்முதலில் குரல் கொடுத்தவர்கள் தமிழர்களே. அதன் பின்னர் இலங்கையின் சுதந்திரப் போராட் டத்திற்கும் வித்திட்டவர்கள் தமிழர்களே என்பதை எதிர்த்து ஒரு சிங்களத் தலைமைக்கூட மறுப்புத் தெரிவிக்க முடியாது.
1948 ஆம் ஆண்டு ஆங்கிலேய காலனித்துவத்திலிருந்து விடுதலையடைந்த இலங்கை இன்னமும் சிங்கள இனவாதத்திலிருந்து விடு தலையடைய முடியாமையே இந்த நாட்டில் தமிழர்கள் தலைநிமிர முடியாமல் உள்ளது.
1950 ஆம் ஆண்டுக்குப் பின்னர் தமிழத் தேசியத்தைப் பொறுப்பேற்ற தந்தை செல்வநாயகம், அமிர்தலிங்கம் உள்ளிட்ட பெருந்தலைவர்களின் போராட்ட அலைகள் சிங்கள இனவாதத்துக்குக் கெதிராக இலங்கையின் நாடாளுமன்ற மெங்கும் ஒழித்தது.
ஆனால், அதன் எதிரொலியாகத் தமிழர்களுக்கு உரிமைகள் கொடுக்க முடியாது என 1956 ஆம் ஆண்டு பண்டாரநாயகவினால் தனிச் சிங்கள இனவாதச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இத்தனையாண்டுகால இனப் போராட்டத்திற்கு ஒரு விதத்தில் பண்டார நாயகக்கூட பிரதானக் காரணமெனலாம்.
அவர் அன்று சிங்களச் சட்டத்தை நிறை வேற்றியதன் பின்னரே இனவாதம் என்ற பதம் சிங்கள மக்கள் மத்தியில் விதைக்கப் பட்டது. தமிழர் வரலாற்றில் முதல் எதிரி என்றால் பண்டாரநாயக்காதான்.
பண்டாரநாயகவிற்குப் பின்னர் இலங் கையாண்ட அனைத்து சிங்களத் தலைமைகளும் தங்களுடைய அரசியல் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள சிங்கள இனவாதத்தை ஒரு பகடைக்காயாகப் பயன் படுத்திக்கொண்டனர்.
அத்துடன் அந்தக் காலகட்டத்தில் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும் பாகக் காணப்பட்ட மலையகத் தமிழர்களை இந்த நாட்டை விட்டு விரட்டியடிக்கும் பல் வேறு நாடகங்களையும் சிங்களப் பேரின வாத அரசு அரங்கேற்றியது. மலையக மண்ணில் 150 வருடங்களாக அடிமை வாழ்வை வாழ்ந்துவந்த மலையகத் தமிழர்களை சிறிமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் சிறிமா-சாஸ்த்திரி ஒப் பந்தம் என்ற பேரில் இந்த நாட்டை விட்டு இந்தியாவுக்கு விரட்டியடித்தனர்.
அரசியல் ரீதியாகத் தமிழர்களின் உரி மைகளை வென்றெடுக்க பல உயிர்த்தி யாகங்களுக்கு மத்தியில் பெரும் தமிழ்த் தேசியத் தலைமைகள் போராடியபோதும் அதனை சிங்கள அரசியல் தலைமைகளிட மிருந்துபெற முடியாதுபோனது.
1977 ஆம் ஆண்டு தனித் தமிழீழ வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப் பட்ட பொழுது சிங்களர்கள் மத்தியில் தமிழர்களைத் தீவிரவாதிகளாக அடையாளப் படுத்திய சிங்களத் தலைமைகளினால் 1983 ஆம் ஆண்டு பாரிய இனவழிப்பு இனக் கலவரத்தைக் கட்டவிழத்து விட்டனர்.
வட்டுக்கோட்டை தமிழீழத் தீர்மானத்துக்குப் பின்னர் சிறிய சிறிய ஆயுதக்குழுக்களாக காணப்பட்ட தமிழர்கள் 1983 ஆம் ஆண்டு இடம் பெற்ற தமிழ் இனப்படுகொலையின் பின்னர் மாபெரும் ஆயுதக் குழுக்களாகத் தோற்றம் பெற்றனர்.
1983 ஆம் ஆண்டு இனக்கலவரத் தின் எதிரொலியாகத் தோன்றிய இரு பிரதான விடயங்கள், ஒன்று தமிழர் களுக்கு தனி ஈழம் தான் இறுதித் தீர்வு; அதை வழிநடத்த தமிழீழ விடுதலைப் புலிகளே உரிய அமைப்பு ஆகிய இரண்டும் கொள்கைகளும் 1983 ஆம் ஆண்டு ஜூலை 23 இனக்கலவரத்தின் எதிரொலிகளாக ஒலித்தன.
தமிழர்களின் இனவிடுதலைப் போராட்டம் என்பது மிக நீண்ட வரலாற்கைக் கொண்டது. இந்த நூற்றாண்டில் இனவிடுதலைக்காகப் போராடிய விடுதலை இயக்கம் என் றால் அது தமிழ்த் தேசிய இனத்துக் காக வீரகளமாடிய தமிழீழ விடுதலைப் புலிகள் மாத்திரமே. 33 வருடகால இனப்போராட்டமென்பது வெறும் வாய் பேச்சாக நடந்தது அல்ல. மாறாக ஆயிரமாயிரம் மாவீரர்களினதும் எண்ணிலடங்காத எம் உறவுகளின் உயிர் தியாகங்களுடனும் நடந்ததேயாகும்.
விடுதலைப் புலிகளின் தமிழ்த் தேசியமென்பது பல நூற்றாண்டு காலமாக இந்த நாட்டில் வாழ்ந்துவரும் தமிழ் இனத்தின் சுயநிர்ணயம் பாது காக்கப்பட வேண்டும் என்பதேயாகும். அரசியல் ரீதியாகப் போராடிய தமிழர் களுக்கு சிங்கள அரசு மேற்கொண்டது இனவாதமும், இனப்படுகொலையும் தான். 1983 ஆம் ஆண்டு 65 ஆயிரம் வரையிலான தமிழர்கள் கொல்லப் பட்ட மிகக் கொடூரமான இனக் கலவரத்தை சிங்கள அரசு தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்டது.
1983 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு வரை தமிழீழத்தையாண்ட விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்கும் வரை 60 வருடகாலமாகத் தமிழ்த் தேசியம் என்பது தமிழர்கள் மத்தியில் விதைக்கப்பட்டு அறுவடையும் எடுக்கப்பட்டிருந்தது. மாவீரர்களின் தத்துவப்படி தமிழ்த் தேசியம் தமிழர்களின் மத்தியில் இருக்கும் வரைதான் தமிழர்கள் ஒன்று மையுடன் தமிழர்களின் விடுதலைக்காக ஒருமித்தக் குரலோடு போராடுவார்கள்.
விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னர் மாவீரர்கள் சொன்ன தத்துவங் களின் மகிமையை தமிழ் இனம் நன்றாக உணர்ந்துள்ளது.
ஈழவிடுதலைப் போராட்டத்தில் எத்தனை ஆயிரம் உயிர்த்தியாகங்கள் இவற்றுக்கு விடைகொடுக்க வேண்டிய சிங்கள அரசை தட்டிக்கேட்கும் தமிழ்த் தலைமைகளின் தமிழ்த் தேசியம் இன்று செத்துப்போயுள்ளது. குறிப்பாக 2009 ஆண்டுக்குப் பின்னர் அரசியல் ரீதியாக எழுச்சியடைந்தத் தமிழர்களின் போராட்டம் இன்று அரசியல் சாக்கடைக்குள் விழுந்து விட்டதோ என எண்ணத் தோன்றுகின்றது.
தமிழ்த் தேசியப் போராட்டம் தேர்தலை மயப்படுத்தி அவர்களின் அதிகாரத் தை நிலைநிறுத்தும் போராட்டமாக மாறி யுள்ளது.
ஈழ விடுதலையில் உயிர்நீத்த எம் மாவீரர்களின் கனவுகள் சிதைக்கப்படு வதை உள்நாட்டுத் தமிழர்களும், புலம் பெயர் தமிழர்களும் ஒருகாலமும் அனு மதிக்கமாட்டார்.
வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ்த் தலைமைகள் தெளிவாக அரசியல் காய் நகர்த்தலை மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான காலகட்டம் இது என்பதை மறந்துவிடக்கூடாது.
ஐ.நா. அறிக்கை வெளிவர உள்ளது, இலங்கை நாடாளு மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இவ்வாறான சூழலில் தமிழர் கள் தமிழ்த் தேசியத்தை மறந்துச் செயற் படுவது என்பது தமிழர் வரலாற்றில் தமிழ்த் தேசியத்தை மறக்க வழிகாட்டி விடும்.
சிங்கள இனவாத அரசுக்கு பயந்து, அரசியல் சொற்ப ஆசைக்காக தமிழர் களின் சுயநிர்ணயத்தை மறக்க நினைக்கும் தமிழ்த் தலைமைகள் தெளிவாக விளங்கிக்கொள்ள வேண்டும்.
சிங்கள அரசு 65 வருடகாலமான தமிழர்களுக்கு என்ன செய்ததென்று. தமிழீழ விடுதலைப் புலிகளும், தந்தை செல்வ நாயகமும் சொன்ன ஒரு விடயம் தான் ஈழ விடுதலையயன்பது வெறும் பேச்சு மாத்திர மல்ல எம்மினத்தின் அடை யாளம். வரலாற்று காலம் தொட்டு வாழ்ந்துவரும் தமிழர்களின் அடை யாளம். ஆகவே, தான் தமிழீழக் கோரிக்கையை முன்வைச் செயற்பட்டனர்.
இங்கு குறிப்பிட முனைந்த விடய மென்பது, எம் முன்னோர்களில் தமிழத் தேசியக் கொள்கையை மக்கள் மத்தியிலிருந்தும், தமிழர்களின் அரசியலி லிருந்தும் விளக்கிச் செயற்பட முனைவதை எந்த அரசியல் தலைமைக ளுக்கும் மக்கள் இடமளிக்கப் போவதில்லை.
உலகளாவிய ரீதியில் வாழும் புலம் பெயர் தமிழர்களும், வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களும் மிக முக்கியமான ஓர் அரசியல் தீர்வை பெறும் கால கட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இதற்கான வாய்ப்பை இழக்கும் வகையில் வகையில் நடைபெறும் அனைத்துச் செயற்பாடுகளும் தமிழர் களின் அரசியல் உரிமைகளை கேள்விக் குறியாக்கிவிடும். ஐ.நா. அறிக்கை மாத்திரமல்ல இன்று சர்வதேச நாடு களின் உதவியுடன் புலம்பெயர் தமிழ்ச் சமூகம் பாரிய அரசியல் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றன.
ஆயுத போராட்ட காலத்தையும் தாண்டி தமிழர்களின் உரிமைப் போராட்டம் சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது. 65 வருட காலமாக கடைப்பிடித்து வந்த தமிழ்த் தேசியக் கொள்கையை இத் தருணத்தில் கைவிட்டு செயற்படுவ தென்பது மீண்டும் மீண்டும் சிங்களவர்கள் கையில் தமிழர்களின் உரிமையை அடகு வைப்பதற்குச் சமனாகும்.
எனவே தான் தமிழ்த் தலைமைகள் மிக உன்னிப்பாக அவதானித்து சிங்கள அரசியல் தலைமைகளின் காய்நகர்த் தலை புரிந்துசெயற்பட வேண்டும். அத்துடன், தமிழ்த் தேசியத்தை ஒரு காலமும் நம் மக்கள் மத்தியிலிருந்த இல்லாதொழித்துவிடக்கூடாது.