Breaking News

கூட்டமைப்பு 20 ஆசனங்களை பெற்று பலமுள்ள கட்சியாகமாறும் : முன்னாள் எம்.பி. செல்வரசா


எதிர்­வரும் பாரா­ளு­மன்ற தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு வட­,கி­ழக்கில் 20க்கும் மேற்­பட்ட ஆச­னங்­க­ளைப்­பெற்று பல­முள்ள கட்­சி­யாக மாறும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் மட்­டக்­க­ளப்பு மாவட்ட முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பொன்.செல்­வ­ராசா தெரிவித்தார்.

மட்­டக்­க­ளப்பு, புகை­யி­ரத வீதியில் நேற்று முன்தினமிரவு நடை பெற்ற செய்­தி­யா­ளர்கள் சந்­திப்பில் கருத்துதெரிவிக்­கும்­போதே அவர் இவ்­வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

பாரா­ளு­மன்றம் கலைக்­கப்­பட்­ட­தா­னது தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினால் எதிர்­பார்க்­கப்­பட்ட ஒரு விட­யமா­கவே பார்க்­கப்­ப­டு­கின்­றது. 20ஆவது திருத்­தச்­சட்டம் பாரா­ளு­மன்­றத்­திற்கு கொண்­டு­வ­ரு­வ­தற்கு முதல் பாரா­ளு­மன்றம் கலை­ய­வேண்டும்,பழைய விகி­தா­சார முறைப்­படி தேர்தல் நடை­பெ­ற­வேண்டும் என்­பதில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு உட்­பட சிறு­பான்­மைக்­கட்­சிகள் மற்றும் சிறு கட்­சிகள் உறு­தி­யாக இருந்­தன.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்பை பொறுத்­த­வ­ரையில் பாரா­ளு­மன்றம் கலை­ய­வேண்டும் என்­பதில் நம்­பிக்­கை­யுடன் இருந்தோம். ஆகவே இது தொடர்பில் நாங்கள் அலட்­டிக்­கொள்­ளவும் இல்லை; அதிர்ச்­சி­ய­டை­யவும் இல்லை.

தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினை பொறுத்­த­வ­ரையில் தேர்தல் காலத்தில் மட்டும் மக்­க­ளிடம் செல்­வ­தில்லை.நாங்கள் தொடர்ச்­சி­யாக மக்­களை சந்­தித்­து­வ­ரு­கின்றோம்.அவர்­களின் பிரச்­சி­னை களை ஆராய்ந்து முடிந்­த­வ­ரையில் தீர்த்­து­வ­ரு­கின்றோம்.

மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கடந்த காலத்தில் இடம்­பெற்ற அத்­து­மீ­றிய குடி­யேற்­றங்கள் மற்றும் அம்­பாறை மாவட்ட பெரும்­பான்­மை­யி­னத்தின் அத்­து­மீ­றிய பயிர்ச்­செய்­கைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டு­வந்­தது.அண்­மையில் கூட அத்­து­மீ­றிய குடி­யேற்ற வாசி­க­ளுக்கு வாக்­காளர் விண்­ணப்­பங்கள் கூட வழங்­கப்­பட்ட நிலையில் அவற்­றினை நிரா­க­ரிக்­க­வேண்டும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மட்­டுமே குரல்­கொ­டுத்­து­வந்­தது.

கடந்த காலத்தில் இருந்த அரா­ஜக ஆட்­சியை வீட்­டுக்கு அனுப்­பு­வ­தற்கு சிறு­பான்­மைக்­கட்­சிகள் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட்­டன.அத்­துடன் கடந்த கால ஆட்­சியில் கப­ளீ­கரம் செய்­யப்­பட்ட வடக்கில் உள்ள காணிகள் தற்­போது படிப்­ப­டி­யாக வழங்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.ஏற்­க­னவே ஆயிரம் ஏக்கர் காணிகள் வட­ம­ராட்­சியில் வழங்­கப்­பட்­டுள்­ளன.அதே­போன்று சம்பூர் பகு­தியில் மீள்­கு­டி­யேற்­றத்­திற்­கான ஆக்­கபூர்­வ­மான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.

அதே­போன்று கடந்த காலத்தில் கைது­செய்­யப்­பட்ட தமிழ் இளை­ஞர்­களை விடு­விப்­ப­தற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன.புதிய அர­சாங்க காலத்தில் புதிய ஜனா­தி­ப­தி­யினால் முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வரும் சில நட­வ­டிக்­கைகள் இவை­யென குறிப்­பி­டலாம்.

2010ஆம் ஆண்டு நடை­பெற்ற தேர்தல் தமி­ழர்­க­ளுக்கு யார் தலை­வர் என்று வெளிக்­காட்­டி­யது.2009ஆம் ஆண்டு போர் மௌனிக்­கப்­பட்­டதன் பின்னர் தமி­ழர்­களின் தலை­வர் யார் என்ற கேள்­விக்­குறி இருந்த காலத்தில் 2010ஆண்டு நடை­பெற்ற தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பினை அமோக வெற்­றி­பெ­றச்­செய்­தனர்.அதன்­பி­றகு வந்த அனைத்து தேர்­தல்­க­ளிலும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பை தமிழ் மக்கள் அமோக வெற்­றி­பெ­றச்­செய்­தனர்.

இதே­போன்று எதிர்­வரும் பொதுத்­தேர்­த­லிலும் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு அமோக வெற்­றியை பெறும்.தமிழ் மக்­க­ளுக்கு கைகொ­டுக்கும் கட்­சி­யாக இந்த நாட்டில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு மட்­டுமே உள்­ளது.

2010ஆம்­ஆண்டு 14 பிர­தி­நி­திகள் வெற்­றி­பெற்று பாரா­ளு­மன்றம் சென்றோம்.இந்த தேர்­தலில் தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு 20க்கும் மேற்­பட்ட ஆச­னங்­க­ளைப்­பெறும் என்ற நம்­பிக்­கை­யுள்­ளது என்றார்.