வில்லன் நடிகர் ஆத்மா உடன் மோதலில் இறங்கிய தல ரசிகர்கள்
தல அஜீத் நடித்த படம் என்னை அறிந்தால் படத்தில் அருண் விஜய்யின் வில்லன் குரூப்பில் இன்னொரு வில்லன் நடிகராக நடித்தவர் ஆத்மா. ஆறடி உயரம் கொண்டவரான இவர், அதற்கு முன்பு ஆர்யா நடித்த மீகாமன் படத்திலும் நடித்திருந்தார்.
தற்போதும் சில படங்களில் நடித்து வரும் இவர், என்னை அறிந்தால் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருந்தபோது, ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக காரைக்குடிக்கு சென்றிருந்தாராம். அப்போது ஒரு பேக் கடைக்கு சென்று பேக் வாங்கினாராம்.மேலும், அந்த கடையில் 25 சதவிகிதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்ததால், அந்த தொகையை கழித்துக்கொண்டு பேக்கிற்கான பணத்தை கொடுத்தாராம் ஆத்மா.
ஆனால் அந்த கடையில் இருந்த அஜீத் ரசிகர், உங்களுக்கு தள்ளுபடி தர முடியாது என்றாராம். ஏன்? எதற்காக? என்று ஆத்மா கேட்டபோது, என்னை அறிந்தால் படத்தில் எங்கள் தலைவர் அஜீத்தை கலாய்ப்பது போன்று ஒரு காட்சியில் நடித்திருந்தீர்கள். அதனால் உங்களுக்கு மட்டுமே தள்ளுபடி கிடையாது என்றாராம் அந்த அஜீத் ரசிகர்.
மேலும், இனிமேல் தலயை கலாய்ப்பது போல் எந்த படத்திலும் நடிக்காதீர்கள் என்று கேட்டுக்கொண்டாராம். இதையடுத்து அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அப்போது, கடை முதலாளி தலையிட்டு ஆத்மாவுக்கான தள்ளுபடி தொகையை கொடுக்குமாறு கேட்டுக்கொண்ட பிறகே அந்த அஜீத் ரசிகர் அடங்கினாராம்.