எல்லை மீறினால் பதிலடி கொடுக்கப்படும்! பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை
பாகிஸ்தான் இராணுவம் எல்லையில் அத்துமீறினால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்று இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஷ்மீர் மாநிலம் ஜம்மு பிராந்திய எல் லைப் பகுதிகளில் கடந்த 15ஆம் திகதி முதல் பாகிஸ்தான் இராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. நேற்று அதிகாலையும் பீரங்கி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதனிடையே பாகிஸ்தான் இராணுவம் காஷ்மீரில் இந்திய விமானம் உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி, குறித்த விமானத்தை சுட்டு வீழ்த்தியுள்ளது.
இந்த விவகாரங்கள் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் டில்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக் கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்துக்குப் பின்னர் வெளியுறவுத் செயலாளர் ஜெய்சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது,
ரஷ்யாவில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபும் சந்தித்துப் பேசினர். அப்போது வெளியிடப்பட்ட கூட்டறிக்கையின்படி செயல்படவே நாங்கள் விரும்புகிறோம். ஆனால், பாகிஸ்தான் இராணுவம் எல்லை யில் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இப்போதைய சூழ்நிலை முற் றிலும் மாறியுள்ளது. பாகிஸ்தான் இராணுவ நடவடிக்கையை வேடிக்கை பார்க்க முடியாது. அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.
கடந்த சில நாட்களாக இந்தியா மீது பாகி ஸ்தான் அரசு அபாண்டமான குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றது. பாகிஸ்தான் இராணுவம் சுட்டு வீழ்த்தியதாகக் கூறப்ப டும் ஆளில்லா உளவு விமானம் சீனத் தயாரிப்பு ஆகும். அது இந்திய உளவு விமானம் அல்ல.
மேலும், பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் இந்திய ஹெலிகொப்டர்பறந்ததாக குற்றம் சாட்டுவதும் தவறான தகவல். அந்தப் பகுதியில் தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயற்சி மேற்கொண்டனர். அதை தடுக்கவே அப்பகுதியில் ஹெலிகொப்ட ரில் ரோந்து பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது பாகிஸ்தான் எல்லைக்குள் இந்திய ஹெலிகொப்டர் நுழையவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன்.
எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் ஹாட்லைன் தொலைபேசியில் இந்திய தரப்புடன் பேசியிருக்கலாம். தற்போதைய விவகாரம் தொடர்பாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பாகிஸ்தான் தரப்புடன் இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். நானும் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்துடன் பேசியுள்ளேன். ஆனால், அதன் பின்னரும் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனிடையே பாகிஸ்தான் இராணுவம் வெளியிட்ட அறி க்கையில், இந்திய இராணுவ தாக்குதலில் 4 பேர் உயிரிழந்திருப்பதாகவும் பலர் காயமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட் டுள்ளது.