Breaking News

புதிய அரசு இது­வ­ரையில் தமி­ழ் மக்களுக்கு எதுவும் செய்­ய­வில்லை - கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம்

புதிய அர­சாங்கம் இது­வ­ரையில் தமிழ் மக்­க­ளுக்கு எந்த பய­னையும் தர­வில்லை. மாறாக தமிழ் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்டு துரத்­தப்­பட்ட மஹிந்­தவை மீண்டும் ஆட்சி பீடத்தில் ஏற்­றவே முனை­கின்­றது என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் தலைவர் கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் குற்றம் சுமத்­தி­யுள்ளார்.

யாழ்.கந்­தர்­ம­டப்­ப­கு­தியில் நேற்று முன்­தினம் வியா­ழக்­கி­ழமை நடை­பெற்ற மக்கள் சந்­திப்­பி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். இவ்­வி­டயம் தொடர்­பாக அவர் மேலும் தெரி­விக்­கையில்:-

இந்த முறையும் ஒரு ராஜ­ப­க் ஷவை வீழ் த்தி இன்­னு­மொரு ராஜ­ப­க் ஷவை ஆட்­சி க்குக் கொண்­டு­வ­ரு­வ­தற்கு தமிழ் மக்­க­ளு­டைய வாக்கு பலத்தை பயன்­ப­டுத்த கூடாது. அப்­ப­டிப்­பட்ட ஒரு ஆட்­சி­மாற்றம் தமிழ் மக்­க­ளுக்கு தேவை­யில்லை.

உண்­மை­யி­லேயே மஹிந்த ராஜ­ப­க் ஷ வின் சித்­தாந்­தங்­களை முற்­று­மு­ழு­தாக நிரா­க­ரி த்து தமிழ் மக்­க­ளுக்கு நலன் கொடுக்கக் கூடிய வகை­யிலே ஒரு புதிய ஆட்சி வரப்­போ­வ­தென்றால் எங்­க­ளு­டைய ஆத­ர­வினை முற்­று­மு­ழுதாக கொடுக்­கலாம் என்­பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ராஜ­ப­க் ஷவை வீழ்த்தி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் தலைமையில் இருந்த அந்த கூட்­டாட்சி முற்­று­மு­ழு­தாக ராஜ­ப­க் ஷவை விட தீவி­ர­மாக தமிழ் மக்­க­ளு­டைய விவ­கா­ரங்­களில் சிங்­கள தேசிய இனத்தின் நலன்கள் என்ற கோணத்தில் அணு­கு­வார்கள் என்ற வாக்­கு­று­தி­யை கொடுத்­துத்தான் தென்­னி­லங்­கை யில் அந்த தரப்பு செயற்­பட்­டது.

ஆனால் இன்று கவலை என்­ன­வென்றால் ஆட்சி மாற்றம் பெரிய மாற்­றத்தை கொடுக்கும் என்று நம்­பிக்கை கொடுத்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒரு வேலைத்­திட்­டத்தை முன்­னெ­டுத்து, மிகப் பெரிய அளவில் அந்த ஆட்­சி­மாற்­றத்­திற்கு தமிழ் மக்­களை வாக்­க­ளிக்க செய்தும் இன்று ஆட்­சியில் இருந்து துரத்­தப்­பட்ட மஹிந்­த­வையே மைத்­தி­ரியின் புதிய ஆட்சி தன்­னு­டைய மிக முக்­கி­ய­மான வேட்­பா­ள ­ராகக் கொண்டு வரு­கின்ற நிலைமை உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

தற்­போது இருக்­கி­ன்ற ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களை மெல்ல மெல்ல குறைத்து அவற்றை பிர­த­ம­ருக்கு கொடுக்­கின்ற போக்கில் போய்­கொண்­டி­ருக்­கின்ற நிலை­யிலேயே பாரா­ளு­மன்­றத்­திற்கு புதி­தாக வந்த மஹிந்த ராஜ­ப­க் ஷவை மீண்டும் வந்து ஜனா­தி­ப­தி­யிடம் இருந்து பாரா­ளு­மன்­றத்­திற்கு கொடுக்­கின்ற அதி­கா­ரங்­களை தான் பயன்­ப­டுத்தக் கூடிய நிலைமை உரு­வாக்­கப் பட்­டி­ருக்கும் நிலையில் இந்த மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் ஆட்­சி­மாற்றம் எவ்­வ­ளவு நம்­பிக்கை கொடுத்­தி­ருக்­கின்­றது என்று மக்கள் சிந்­திக்க வேண்டும்.

நாங்கள் உணர்ச்­சி­வ­சப்­ப­டாமல் வெறு­மனே பழி­வாங்கல் என்ற கோணத்தில் சிந்­தித்து செயற்­ப­டாமல் துர­நோ­க்கத்­தோடு செயற்­பட வேண்டும் என்­ப­தால்தான் தமிழ்த் தேசிய மக்கள் முன்­னணி தேர்தல் காலத்தில் தமிழ் மக்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்­தது.

இன்­றா­வது மக்கள் இவற்றை நன்கு விளங்கிக் கொள்ள வேண்டும். நாங்கள் பொறுப்­போ­டுதான் நடந்து கொள்­கின் றோம். வெறு­மனே மக்கள் ஒரு நிலையில் இருக்­கின்­றதால் மக்கள் பழி­வாங்க விரும்­பு­கின்­ற­தனால் மக்கள் ஏற்றுக் கொள்­ள­ாத கருத்தைக் கூறி எங்­களை மக்கள் விமர்­சிக்­கின்ற தேவை எங்­க­ளுக்கு இல்லை.

ஆனால் மக்கள் விரும்­பாத ஒரு கருத்தை நாங்கள் முன்­வைக்­கின்றோம் என்றால் அதற்கு ஒரு ஆழ­மான காரணம் இருக்­கின்­றது என்­பதை மக்கள் உணர தொடங்க வேண்டும்.

எம்மை பொறுத்­த­வ­ரையில் நாம் தேர்­த ­லுக்­கான வாக்­கு­களை பெறு­வ­தற்கு செயற்­ப­டு­கின்ற ஒரு தரப்பு இல்லை. மக்கள் நம்­பிக்கை வைத்­தி­ருந்தால் இனி­வரும் கால ங்களில் நாங்கள் அவர்களுக்கு கூறுகின்ற ஆலோசனைகளை சரியாக புரிந்து கொண் டு செயற்பட்டால் பெரிய அளவில் முன் னேற்றம் அடைய கூடிய நிலைமை வரும்.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட நிலையில் நாங்கள் மீண்டும் மீண்டும் எதிர்காலத்தில் ஏமாற்றப்படக் கூடாது என்பதுதான் எங்கள் விருப்பம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்