Breaking News

ஐ.தே.மு. தேர்தல் அறிக்கை, இனப் பிரச்சினைக்கான தீர்வை வைத்துள்ளதா?

இலங்கையில் அடுத்த மாதம் 17ஆம் தேதி நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரங்கள் சூடுபிடித்து வருகின்றன.

மக்கள் விடுதலை முன்னணி எனப்படும் ஜெ.வி.பி. தனது தேர்தல் அறிக்கையை புதன்கிழமை வெளியிட்டது. நேற்று ஐக்கியத் தேசியக் கட்சி தலைமையிலான, நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி தனது தேர்தல் அறிக்கையை வியாழக்கிழமை வெளியிட்டது. ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வு, பொருளாதார அபிவிருத்தி போன்ற பல அம்சங்கள் இந்த அறிக்கையில் உள்ளன.

ஆனாலும் நீண்டகாலமாக தொடரும் இனப் பிரச்சினைக்கான நிரந்த அரசியல் தீர்வு காண்பது குறித்து அழுத்தமான செயல்திட்டங்கள் ஏதும் ஐக்கியத் தேசிய முன்னணியின் தேர்தல் அறிக்கையில் இல்லை என்று  சிலோன் டுடே பத்திரிகையின் மூத்த செய்தி ஆசிரியர் ஆனந்த் பாலகிட்னர். தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் சாசனம் ஒன்றின் மூலமாக இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது, எந்த அளவுக்கு யதார்த்த ரீதியில் சாத்தியம் என்பது குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார்.