Breaking News

வன்னி தேர்தல் மாவட்டத்தில் 18 அரசியல் கட்சிகள், 10 சுயேச்சைக் குழுக்கள் களத்தில்

வரும் ஓகஸ்ட் மாதம் 17ஆம் நாள் சிறிலங்கா நாடாளுமன்றதுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் வன்னி தேர்தல் மாவட்டத்தில், மொத்தம் 28 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று நண்பகல் 12 மணியுடன் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த போது, 19 அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் மொத்தம் 30 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. இதையடுத்து, வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இரண்டு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி பந்துல ஹரிச்சந்திர தெரிவித்தார்.

நவ சிஹல உறுமய கட்சியினதும், ஒரு சுயேச்சைக் குழுவினதும் வேட்புமனுக்களே நிராகரிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, 18 அரசியல் கட்சிகளும் 10 சுயேச்சைக் குழுக்களும் வன்னி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளை உள்ளடக்கிய வன்னி தேர்தல் மாவட்டத்தில் இருந்து 6 உறுப்பினர்கள் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவர்.

வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகள்

இலங்கை தமிழரசுக் கட்சி

தமிழர் விடுதலைக் கூட்டணி

ஜன செத பெரமுன

மக்கள் விடுதலை முன்னணி

முன்னிலை சோசலிசக் கட்சி

சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி

சிறிலங்கா மக்கள் கட்சி

அகில இலங்கை தமிழர் மகா சபை

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி

பிரஜைகள் முன்னணி

ஐக்கிய தேசியக் கட்சி,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்

ஈழவர் ஜனநாயக முன்னணி

ஐக்கிய மக்கள் கட்சி

ஜனநாயக ஐக்கிய முன்னணி

ஐக்கிய சமாதான முன்னனி

மௌபீப ஜனதா கட்சி

ஆகியவற்றுடன், 10 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.