இன்று நாடு திரும்புகிறார் சந்திரிகா
லண்டன் சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்க இன்று வியாழக்கிழமை நாடு திரும்புகிறார்.
இவரது வருகை இலங்கையின் அரசியல் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்படுவதற்கான சூத்திரங்கள் இவரின் தலைமையிலேயே எடுக்கப்பட்டன.
தனது தந்தை உருவாக்கிய கட்சியை மீண்டும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் இவர் முன்னெடுப்புகளை மேற்கொண்டார். எனினும் மஹிந்த ஜனாதிபதி தேர்தலில் தோற்ற பின்னர் கடசியைக் கைப்பற்றவே திட்டங்களை வகுத்தார். ஆனால் நாடாளுமன்றத் தேர்தலில் மஹிந்த மீண்டும் அரசியல் களத்தில் குதித்த நிலையில் அவருக்கு வேட்பு மனு வழங்க வேண்டாம் என சந்திரிகா கூறியிருந்தார்.
ஆனால் நிலைமை மாறிய நிலையில் திடீரென சந்திரிகா லண்டனுக்கு சென்றிருந்தார். இந்நிலையில் இன்று வியாழக்கிழமை நாடு திரும்பும் அவர் மஹிந்தவை தோற்கடிக்க அல்லது பிரதமர் பதவியில் அமரவிடாது தடுக்கப் புதிய வியூகங்களை வகுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.