Breaking News

மஹிந்தவை நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம்

மஹிந்த ராஜ­ப­க் ஷவை ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நிரந்­த­ர­மாக அர­சி­ய­லி­லி­ருந்து விரட்­டுவோம். தோல்­வி­ய­டையும் போராட்­டங்­களில் நாங்கள் ஈடு­ப­ட­மாட்டோம். 




எனவே , ஒரு முறை மஹிந்­தவை வீட்­டுக்கு அனுப்­பினோம். ஆனால் அவர் அதனை ஏற்­றுக்­கொள்­ளாமல் இருக்­கின்றார்.

எனவே அவரை மீண்டும் நிரந்­த­ர­மாக வீட்­டுக்கு அனுப்­புவோம் என்­ப­தனை உறு­தி­யாக கூறு­கின்றோம் என்று ஜாதிக ஹெல உறு­ம­யவின் தலை­வரும் ஐக்­கிய தேசிய கட்­சியின் கொழும்பு மாவட்ட வேட்­பா­ள­ரு­மான சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்.கண்­டியில் நேற்று நடை­பெற்ற ஐக்­கிய தேசிய கட்­சியின் முத­லா­வது தேர்தல் பிர­சாரக் கூட்­டத்தில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

ஐக்­கிய தேசிய கட்­சியின் முக்­கி­யஸ்­தர்கள் முன்னாள் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் என பலர் இந்த முத­லா­வது கூட்­டத்தில் கலந்­து­கொண்­டனர்.

சம்­பிக்க ரண­வக்க அங்கு தொடர்ந்து உரை­யாற்­று­கையில்,

மஹிந்த ராஜ­ப­க்ஷவை ஆகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி நிரந்­த­ர­மாக அர­சி­ய­லி­லி­ருந்து விரட்­டுவோம். தோல்­வி­ய­டையும் போராட்­டங்­களில் நாங்கள் ஈடு­ப­ட­மாட்டோம். எனவே ஒரு முறை மஹிந்­தவை வீட்­டுக்கு அனுப்­பினோம். ஆனால் அவர் அதனை ஏற்­றுக்­கொள்­ளாமல் இருக்­கின்றார்.ம். எனவே அவரை மீண்டும் நிரந்­த­ர­மாக வீட்­டுக்கு அனுப்­புவோம் என்­ப­தனை உறு­தி­யாக கூறு­கின்றோம்.

கடந்த 2005 ஆம் ஆண்டு மஹிந்த தனித்து இருந்தார். நாங்கள் அவரை பத­விக்கு கொண்டு வந்தோம். ஆக்­கா­லத்தில் யுத்தம் செய்ய முதுகு பல­மில்­லாமல் புலி­க­ளுக்கு காசு கொடுத்­துக்­கொண்­டி­ருந்த சந்­தர்ப்­பத்தில் நாங்கள் மாவி­லாறு விட­ய­ததில் தலை­யிட்டு யு த்தத்தை நடத்த ஊக்­கு­வித்தோம். ஏனவே எம்மால் இதனை செய்ய முடியும். எனவே மஹிந்­தவை வீட்­டுக்கு அனுப்­புவோம். முஹிந்­தவின் ஆட்­சிக்­கா­லத்தில் வீதி­ய­மைத்­தலில் பாரிய ஊழல் இடம்­பெற்­றுள்­ளது. அனைத்து விட­யங்­க­ளிலும் டீல் போடப்­பட்­டது.

100 நாட்­களில் என்ன செய்­தீர்கள் என்று கேட்­கின்­றனர். எத்­த­னையோ செயற்­பா­டு­களை நாங்கள் 100 நாட்­களில் செய்தோம். நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி முறை­மையில் காணப்­படும் அதி­கா­ரங்­களை குறைத்­துள்ளோம். இது வர­லாற்று ரீதி­யான விட­ய­மாகும். தேர்தல் ஆணை­யா­ள­ருக்கு அதி­கா­ரங்­களை வழங்­கி­யுள்ளோம். அத­னால்தான் வேட்பு மனுத்­தாக்­கலின் பின்னர் ஊர்­வ­ல­ஙகள் செல்­ல­வில்லை. இன்று சுயா­தீன நீதித்­துறை காணப்­பட்­டது.

திரு­டர்­களை ஏன் பிடிக்­க­வில்லை என்று கேட்­கின்­றனர். ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி புதிய அர­சாங்கம் அமைந்­ததும் திரு­டர்­களை பிடிக்க ஊழல் எதிர்ப்பு ஆணைக்­கு­ழுவை நிய­மிப்போம். இதற்கு பிர­த­மரும் இணங்­கி­யுள்ளார். பஷில் ராஜ­பக்ஷ வைத்­தி­ய­சா­லையில் இருந்­த­து­போன்று இல்­லாமல் திரு­டர்­களை நாங்கள் பிடிப்போம்.

விரைவில் மன்னார் படுக்­கையில் எரி­வா­யுவை எடுப்பதற்கு நடவடிக்கை எடுப்போம். இதனை மஹிந்த காலத்தில் செய்திருக்கலாம். ஆனால் அவரின் காலத்தில் டீல் போடப்பட்டது. ஆனால் எமது ஆட்சியில் அவ்வாறு நடக்காது. ஏனவே மஹிந்தவை ஆகஸ்ட் மாதம் நிரந்தரமாக வீட்டுக்கு அனுப்புவோம்.