மைத்திரியின் அறிவிப்பு தொடர்பில் மஹிந்த அணி ஆராய்வு: இன்று முக்கிய அறிவிப்பு
ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்பு மனு வழங்கியமை தொடர்பாக
நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசேட உரையொன்றை நிகழ்த்திமை தொடர்பாக மஹிந்த ஆதரவு தரப்பு சிரேஷ்ட உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று இரவு மஹிந்த ராஜபக்ஷவுடன் விசேட சந்திப்பொன்று நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
மீரிஹானவில் உள்ள மஹிந்தவின் வீட்டில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளதாக தெரிய வருகின்றது. இந்த சந்திப்பின் போது மைத்திரியின் உரையில் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தல் தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சந்திப்பு மற்றும் மைத்திரியின் உரை தொடர்பாக இன்று விசேட ஊடக சந்திப்பொன்றை நடத்தி மஹிந்த தரப்பினர் தமது நிலைப்பாட்டை வெளியிடவுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.