மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இயற்கை எய்தினார்
தமிழ் திரையுலகின் மெல்லிசை மன்னர் என்று அழைக்கப்படுவர் எம்.எஸ்.விஸ்வநாதன். கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் இவர் சிகிச்சை பெற்று வந்தார். எனினும் இவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அதிகாலை 4:15 மணிக்கு அவர் இறைவனடி சேர்ந்தார்.
சென்னை சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் திரையுலகினர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய உடல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இறுதிக் கிரியைகள் நாளை இடம்பெற உள்ளது. இவர் இதுவரை 1200 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். ராமமூர்த்தியுடன் இணைந்து 700 படங்களுக்கும் தனியாக 500 படங்களுக்கும் இசை அமைத்துள்ளார். தமிழ்த் தாய் வாழ்த்துப்பாடலான ‛நீராரும் கடலுடுத்த..' பாடலுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர் எம்.எஸ்.விஸ்வநாதன் ஆவார்.