யாழில் இளம் குடும்பஸ்தரை நான்கு நாட்களாகக் காணவில்லை
கைபேசிக்கு வந்த அழைப்பை ஏற்றுச் சென்ற இளம்குடும்பஸ்தரைக் கடந்த நான்கு நாட்களாகக் காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் - மல்லாகத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியம் சிவராம் (வயது 34) என்பவரே இவ்வாறு காணாமல் போனவராவார். கே.கே.எஸ். வீதி மல்லாகத்தில் தொலைத் தொடர்பு நிலையம் வைத்திருக்கும் குறித்த நபர் கடந்த சனிக்கிழமை கடையில் வேலை செய்து கொணடு இருந்துள்ளார். அச்சமயம் அவரது கைபேசிக்கு அழைப்பு ஒன்று வந்ததாகவும் அதற்குப் பதிலளித்தவாறு தனது மோட்டார் சைக்கிளில் குறித்த நபர் அங்கிருந்து சென்றுள்ளார்.
நீண்ட நேரமாக அவரைக் காணாததால் அவரைத் தொடர்பு கொண்டபோது அவரின் தொலைபேசிக்கு அழைப்பபை ஏற்படுத்த முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த விடயம் குறித்து அவரின் குடும்பத்தினர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.