Breaking News

மோசடிக் கும்பலை தோற்கடிப்போம் சம்பிக்க ரணவக்க தெரிவிப்பு

இலங்­கையின் ஒற்­றை­யாட்சி முறை­மையை பாது­காத்து மீண் டும் ஒரு யுத்தம் ஏற்­படுவதை தவிர்க்கும் நோக்கில் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வது எமது அனை­வ­ரி­னதும் பொறுப்பாகும் என்று அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரிவித்தார்.

ராஜபக்ஷ குடும்ப யுகத்தை மீண்டும் கொண்­டு­வர முயற்­சிக்கும் மோசடிக் கும்­பலை தோல்­வி­ய­டையச் செய்வோம் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். அல­ரி­மா­ளி­கையில் நேற்று ஞாயிற்­றுக்­கி­ழமை இடம்­பெற்ற நல்­லாட்­சிக்­கான ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்­கான புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கையில் கையெ­ழுத்­திடும் நிகழ்வின் பின்னர் உரை­யாற்றும் போதே சம்­பிக ரன­வக மேற்கண்டவாறு தெரி­வித்தார்.

இங்கு அமைச்சர் மேலும் உரை­யாற்­று­கையில்

நாட்­டுக்குள் மீண்டும் அச்­சு­றுத்­தல்­க­ளுக்க இட­மில்லை. இன்று கையெ­ழுத்­திடும் புரிந்­து­ணர்வு உடன்­ப­டிக்கை மூலம் நாட்டின் ஒற்­றை­யாட்சி வியூ­கத்தை தொடர்ந்து பாது­காக்­கவும் உடன்­பட்­டுள்ளோம். இது இந்த எமது கடப்­பா­டாகும்.

அதே­போன்று நாட்டில் மீண்­டு­மொரு யுத்த நிலைமையை ஏற்­ப­டுத்­தாமல் இருப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்­டி­யது எமது இரு­த­ரப்­பி­ன­ரதும் கடப்­பா­டாகும். இதனை ஏற்­ப­டுத்திக் கொள்ள எம்­மி­டையே பரந்­த­ள­வி­லான ஒற்­றுமை தேவை­யாகும்.

கடந்த 190 தினங்­களில் நாம் 19ஆவது திருத்­தத்தை வெற்றி கொண்டோம். அதனால் ஏனைய திருத்­தங்­களை எம்மால் நிறை­வேற்றிக் கொள்ள முடி­ய­வில்லை. இது பெரிய துர்ப்­பாக்­கி­ய­மாகும். எதிர்­கா­லத்தில் புதிய அர­சி­ய­ல­மைப்பை ஏற்­ப­டுத்திக் கொள்­வ­தற்­கான புறச்­சூ­ழலை எம்மால் ஏற்­ப­டுத்திக் கொள்ள முடியும்.

அதற்­கி­டையில் நாட்டில் பொரு­ளா­தார சீர் திருத்­தங்­களை செய்ய வேண்­டி­ய­துள்­ளது. ஜன­வரி 8 ஆம் திகதி ஏற்­ப­டுத்­திய நல்­லாட்­சிக்­கான மாற்­றத்தை தலை­கீ­ழாக்­கு­வ­தற்கும் மீண்டும் ராஜபக் ஷ குடும்ப யுகத்­தையும் கொண்டுவரவும் இன்று பலர் முத­லீடு செய்­கின்­றனர். பெரு­ம­ளவில் பணம் செல­வி­டப்­ப­டு­கி­றது.

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­னணி பிழை­களை திருத்திக் கொள்ளும் என எதிர்­பார்த்தோம். ஆனால் தமது தவறு.களை திருத்திக் கொள்­வ­தாக தெரி­ய­வில்லை. 

ஐ.தே.க.வுக்கும் எமக்கும் இடையில் முரண்­பா­டுகள் உள்­ளன.

இதனால் எதிர்­கா­லத்தில் அர­சி­ய­ல­மைப்பு மாற்­றங்­க­ளையும் பொரு­ளா­தார சீர்­தி­ருத்­தத்­தையும் மேற்­கொள்­வ­தற்கே இன்று உடன்­ப­டிக்கை செய்து கொண்­டுள்ளோம். எதிர்­வரும் ஆகஸ்ட் 17ஆம் திக­திக்கு பிறகு சுதந்­திரக் கட்சியினர் தமது பிழை­களை திருத்திக் கொண்டு எம்­மோடு இனை­வார்கள் என எதிர்­பார்க்­கின்றோம். மீண்டும் நாட்டை இருண்ட யுகத்­திற்கு தள்­ளி­விட முடி­யாது. எனவே மக்கள் எதிர்­வரும் தேர்­தலில் சுதந்­தி­ர­மாக வாக்­க­ளிக்க வேண்டும். ஐ.தே.க.வின் யானைச் சின்­னத்தில் போட்­டி­யி­ட்டாலும் பாரா­ளு­மன்­றத்தில் நாம் சுயா­தீ­ன­மாக இயங்­குவோம் என்றார்.

நிகழ்வில் அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்­தின உரையாற்றுகையில்

ஜன­நா­ய­கத்­திற்­கான 19 ஆவது திருத்­தத்தை எதிர்த்த சரத் வீர­சே­க­ரவை தேசிய வீரன் என மஹிந்த பாராட்­டி­யி­ருப்­பது ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் கொள்­கை­களை குழி­தோண்டிப் புதைத்த செய­லாகும் . சுதந்­தி­ரக்­கட்­சியின் தலைவர் பண்­டா­ர­நா­யக ஐ.தே.கட்சித் தலைவர் டி.எஸ். சேனா­நா­யக தமது கட்­சி­களை அர­சி­ய­லுக்கு அப்­பாற்­பட்ட நாட்­டுக்­கா­கவே கட்­டி­யெ­ழுப்­பி­னார்கள்.

ஆனால் நாட்டில் ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான 19 ஆவது திருத்­த­திற்கு பாரா­ளு­மன்­றத்தில் எதிர்த்து வாக்­க­ளித்த சரத் வீர­சே­க­ரவை தேசிய வீரன் என மஹிந்த பாரட்­டி­யுள்ளார். அந்தப் பாராட்டு சுதந்திரக்கட்சியினதும் பண்டார நாயக்கவினதும் கொள்­கை­களை குழி­தோண்டிப் புதைத்­துள்­ளது.

இத்­தேர்­தலில் மஹிந்­த­வையும், அவ­ரது மோச­டிக்­கான கும்­பலையும் ஒதுக்கி வைக்க வேண்டும் என்றோம். ஆனால் எமது கோரிக்­கைகள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. இவ்­வா­றா­ன­வர்­க­ளோடு இணைந்து தேர்­தலில் போட்­டி­யிட முடி­யாது. எனவே தான் ஐ.தே.க.வுடன் இணைந்தோம். ரணில் தனது கட்­சியின் ஸ்தாபகத் தலை­வரைப் போன்று கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரிக்கு பங்­க­ளிப்பை வழங்­கினார். இது சிறப்­பான முன்­னு­தா­ர­ண­மாகும்.

சரத் அமுனுகமவும் எமக்கு தமது முழு ஒத்துழைப்பையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார். அடுத்த 5 வருடங்களுக்குள் படித்தவர்கள் மற்றும் பண்பானவர்கள் பாராளுமன்றத்திற்கு வரும் நிலைமையை ஏற்படுத்துவோம். வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மற்றும் முஸ்லிம் மக்கள், கிறிஸ்தவ மக்கள் இன்று அச்சமில்லாமல் சுதந்திரமாக வாழும் நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த சுதந்திரத்தை பாதுகாப்போம். இதற்காக ஒன்றுபடுவோம் என்றார்.