முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் காலமானார் (காணொளி)
காலமானர்
மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் உள்ள ஐ.ஐ.எம்.-ல் இன்று கருத்தரங்கு நடைபெற்றது. அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மாலை 6 மணியளவில் மேடையில் பேசிக்கொண்டிருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
மயங்கி விழுந்த அப்துல் கலாம் பெத்தானி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்குஅங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்துல் கலாமின் இறுதி ருவிற்றர் வரிகள் |
இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானர்.
84 வயதான அப்துல் கலாம் தமிழ்நாட்டின் ராமேஷ்வரத்தில் 1931 ஆம் ஆண்டு பிறந்தார். 2002- 2007 வரை இந்தியாவில் 11 வது குடியரசு தலைவராக அவர் இருந்தார். பொக்ரான் அணுகுண்டு சோதனையின் போது பிரதமரின் தலமை அறிவியல் ஆலோசகராக அவர் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மீது மிகுந்த பற்றுக் கொண்ட அப்துல் கலாம், தனது வாழ்க்கை வரலாற்றை அக்னிச் சிறகுகள் என்ற தலைப்பில் புத்தகமாக எழுதி இருக்கிறார்.
தனது அறிவியல் லட்சியத்துக்கு இடையூறாக அமையும் என்பதால் அப்துல்கலாம் திருமணம் செய்து கொள்ளவில்லை.