Breaking News

கட்சி ஒற்றுமைக்காக பிரதமர் பதவியை தியாகம் செய்கிறாராம் நிமல்!

கட்சியின் ஒற்றுமைக்காக பிரதமர் பதவியைத் தியாகம் செய்வதற்கு தான் தயாராக இருப்பாக மஹிந்த ராஜபக்‌ஷவிடம் தெரிவித்துவிதுள்ளார் நிமல்சிறிபால டி சில்வா.




ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பதுளை மாவட்ட குழுத்தலைவர் நிமல் சிறிபால டி சில்வா மஹியங்கனையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் நேற்றுக் கலந்துகொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,

தான் எதிர்க்கட்சித் தலைவர் என்பதால் தாமே அடுத்த பிரதமராக முடியும் எனவும், இருப்பினும் பிரதர் பதவியைத் தியாகம் செய்வதாக மஹிந்த ராஜபக்‌ஸவிற்குத் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார்.அத்துடன், தமக்கு கட்சியின் ஒற்றுமையும் ஆதரவாளர்களின் பாதுகாப்புமே முக்கியம் என தெரிவித்தார்.