கொழும்பில் காணாமற்போன 11 இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு ஒத்திவைப்பு
கொழும்பில் காணாமற்போன 11 இளைஞர்கள் தொடர்பிலான வழக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றில் நேற்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளுக்கு ஒத்துழைக்குமாறு கொழும்பு நீதிவான் கிஹான் பிலபிட்டிய கடற்படைக்கு உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் மனுதாரர் தரப்பின் மேலதிக வாய்மூல விளக்கமளிப்புக்காக இந்த வழக்கு ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.