Breaking News

மகிந்தவுக்கு ஆதரவான பரப்புரையா? – மறுக்கிறது சீனா


மீண்டும் மகிந்த ராஜபக்சவை அதிகாரத்துக்குக் கொண்டு வரும் வகையில் சீனா பரப்புரையில் இறங்கியுள்ளதாக வெளியான செய்திகளை கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் நிராகரித்துள்ளது.


மகிந்த ராஜபக்சவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்கு, சீனா குறுந்தகவல் பரப்புரைகளை மேற்கொண்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இதுகுறித்து, கருத்து வெளியிட்டுள்ள சீனத் தூதரக மூத்த அதிகாரி ஒருவர், இவை தவறாக வழிநடத்தப்படும் வதந்திகள் என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூர் அரசியலில் தலையீடு செய்வதில்லை என்பது சீனாவின் கொள்கை என்றும் அவர் கூறியுள்ளார். இது இருநாட்டு உறவுகளுக்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சி என்றும் அவர் சீனத் தூதரக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார்.