Breaking News

வித்­தியா படு­கொலை சந்­தேக நபர்கள் இன்று நீதி­மன்றில் மீண்டும் ஆஜர்

புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யாவின் படு­கொலை தொடர்பில் சந்­தே­கத்தின் பெயரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள 10 சந்­தேக நபர்களும் இன்று ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றத்தில் மீண்டும் ஆஜர் செய்­யப்­ப­ட­வுள்­ளனர்.

இந்த படு­கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்­டி­ருந்த 9 சந்­தேக நபர்கள் கடந்த முதலாம் திகதி ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­யப்­பட்­ட­தை­ய­டுத்து அவர்­களை இன்­று­வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதிவான் உத்­த­ரவு பிறப்­பித்­தி­ருந்தார்.

இந்­த நிலையில் கடந்­த­வாரம் இச்­சம்­பவம் தொடர்­பாக 10 ஆவது சந்­தேக நபரும் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். இவர்கள் 10 பேருமே இன்­றைய தினம் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­ப­ட­வுள்­ளனர். கடந்த 01 முதலாம் திகதி நடை­பெற்ற விசா­ர­ணை­யின்­போது 9 ஆவது சந்­தேக நபர் கொழும்­புக்கு தப்பிச் சென்­றமை தொடர்பில் விசேட விசா­ரணை நடத்தி அறிக்கை சமர்ப்­பிக்­கு­மாறு நீதிவான் பணிப்­புரை விடுத்­தி­ருந்தார்.

இந்த விசா­ரணை அறிக்கை இன்­றைய தினம் நீதி­மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­டலாம் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. இன்­­றைய விசா­ர­ணை­யின்­போது பாதிக்­கப்­பட்­டோரின் நலனை கவ­­னிப்­ப­தற்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி.தவ­ரா­­ஜாவின் தலை­மையில் சட்­டத்­த­ர­ணிகள் ஆஜ­ரா­க­வுள்­ள­னர்.