Breaking News

தான்தோன்றித்தனமான அரசின் கொள்கைகளை நாம் ஏற்கவேண்டும் என எதிர்பார்ப்பது தவறு

மத்­திய அர­சுக்கும் மாகாண அர­சுக்கும் இடையில் இருக்கும் உற­வு­முறை சந்­தே­கத்­திற்கு இட­மின்றி உண­ரப்­படல் வேண்டும். 

அத்­துடன் மாகாண மக்­க­ளி­னு­டைய தேவை­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் மன­திற்கு எடுத்து மத்­திய அர­சாங்கம் கொள்­கை­களை வகுக்­க­வேண்­டு­மே­யொ­ழிய தான்­தோன்­றித்­த­ன­மாக மத்­திய அர­சாங்­கத்­தி­னு­டைய கொள்­கை­களை நாங்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்று எதிர்­பார்ப்­பது பிழை­யா­னது என வடக்­கு ­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் தெரி­வித்­துள்ளார்.

நேற்று கொழும்பில் ஜனா­தி­பதி தலை­மையில் நடை­பெற்ற கூட்­டத்தில் ஒன்­பது மாகா­ணங்­க­ளிலும் உள்ள ஆளு­நர்கள், முத­ல­மைச்­சர்கள், அமைச்­சர்கள் மற்றும் பிர­தமர் கலந்து கொண்­டனர். இக்­கூட்­டத்தில் வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வரன் உரை­யாற்றும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் உரை­யாற்­று­கையில்; -

ஒரே பாதணி எல்­லோ­ருக்கும் பொருந்தும் என்று எண்­ணு­வது மடமை. மாகா­ண­ச­பை­க­ளுக்­குள்ளே வேற்­று­மைகள் இருப்­பதை நாங்கள் கவ­னத்­திற்கு எடுக்க வேண்டும். வடக்கு, ­கி­ழக்கு மாகா­ணங்­களைப் பொறுத்­த­வ­ரையில் பாரிய அழிவை எதிர்­நோக்­கிய மாகா­ணங்கள் அவை. மன­ரீ­தி­யா­கவும் உடல் ரீதி­யா­கவும் பலத்த பாதிப்­புக்­குள்­ளா­கி­ய­வர்கள் இம்­மா­காண மக்கள். இதை கருத்தில் எடுக்க வேண்டும். 

இலங்கை -–இந்­திய உடன்­பாட்டின் நிமித்தம் தான் 13ஆவது திருத்தச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. வட­கி­ழக்கு மாகாண மக்­களின் பிரச்­சி­னைக்கு பிரத்­தி­யே­க­மான ஒரு தீர்வைப் பெறு­வ­தற்­கா­கவே 13ஆவது திருத்தச் சட்டம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. எனினும் அப்­போ­தைய அர­சாங்கம் அதனை எல்லா மாகா­ணங்­க­ளுக்கும் ஏற்­பு­டையது ஆக்­கி­யது.

எனவே இன்று நடக்கும் இந்தக் கருத்­த­ரங்­கத்தின் அடிப்­ப­டைகள் சம்­பந்­த­மாக எங்­க­ளுக்குள் சில கேள்­விகள் எழு­கின்­றன. அவற்றை நான் இங்கு குறிப்­பி­டு­வ­தாக இல்லை. நடை­மு­றையின் போது ஒரே விடயம் இரு­முறை செயற்­ப­டுத்­தப்­படல், ஆகக் கூடிய வகை­யிலே வளங்­களைப் பாவிப்­பது மற்றும் போது­மான நிதி­யங்­களைப் பெறு­வது போன்­ற­வற்றை கலந்­தா­லோ­சிப்­பதில் எமக்கு எந்­த­வித பிரச்­சி­னை­களும் இல்லை. 

ஆனால் மத்­திக்கும் மாகா­ணத்­திற்கும் இடையில் இருக்கும் உற­வு­முறை சந்­தே­கத்­திற்­கி­ட­மின்றி நிர்­ண­யப்­ப­டுத்­தப்­படல் வேண்டும். மாகா­ண­ ச­பை­களின் தேவை­களை முன்­வைத்து அதே­நேரம் நாட்­டி­னது தேவை­க­ளையும் மனதில் எடுத்து கொள்­கைகள். உரு­வாக்­கப்­பட வேண்டும். இவ்­வாறு உரு­வாக்கும் போது கீழி­ருந்து மேல்­நோக்கி எமது திட்­ட­மைப்பு நடை­பெ­ற­வேண்டும். இப்­பொ­ழுது மேலி­ருந்து கீழ் நோக்கி திட்­டங்கள் வகுக்­கப்­ப­டு­கின்­றன. 

அதைத் தவிர்க்க வேண்டும். மாகாண மக்­க­ளி­னு­டைய தேவை­க­ளையும் அபி­லா­ஷை­க­ளையும் மன­திற்கு எடுத்து மத்­திய அர­சாங்கம் கொள்­கை­களை வகுக்­க­வேண்­டு­மே­யொ­ழிய தான்­தோன்­றித்­த­ன­மாக மத்­திய அர­சாங்­கத்­தி­னு­டைய கொள்­கை­களை நாங்கள் ஏற்­றுக்­கொள்ள வேண்டும் என்று எதிர்­பார்ப்­பது பிழை­யா­னது.

இதை­விட குறித்த குழுவில் மற்­றைய விட­யங்கள் சம்­பந்­த­மாக பல விட­யங்கள் கலந்­தா­லோ­சிக்­கப்­பட்­டன. உதா­ர­ணத்­திற்கு மனி­த­வளம் சம்­பந்­த­மாக போதிய ஆளணி இல்லாக் குறையை மத்­திய அர­சாங்கம் நிவர்த்­தி­செய்­ய­ வேண்டும் என அவர் குறிப்­பிட்டார். மாகாண சபை­க­ளுக்கு உரிய நிதியம் போது­மா­ன­தாக வழங்­கப்­ப­ட­வில்லை என்­பது அவரால் குறிப்­பி­டப்­பட்­டது. நிதி­ய­மா­னது தாம­த­மாகி வரு­வதால் செயல்­திட்­டங்கள் நேரத்­திற்கு முடிக்­க­ மு­டி­யாமை பற்­றியும் அவரால் குறிப்­பி­டப்­பட்­டது.

தனியார் அர­சாங்க பங்­கு­பற்­றலின் கார­ண­மாக முத­லீடு செய்­வதை மாகா­ணங்கள் வர­வேற்­றாலும் அவற்றின் நன்­மைகள் எந்­த­வி­தத்தில் மாகா­ணங்­க­ளுக்கும் அவற்றின் கொள்­கை­க­ளுக்கும் ஏற்­பு­டை­ய­தாக அமையும் என்­ப­தையும் கவ­னத்­திற்கு எடுக்கவேண்டும் என்பதையும் முதல

மைச்சர் குறிப்பிட்டார். உள்ளூராட்சி மன்றங் களின் அலுவலர்கள் சம்பந்தமாக போதிய பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்ட அவர், தற்போதிருக்கும் ஆளணி வெற்றிடங்கள் உடனேயே நிரப் பப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இவ்வாறு ஒவ்வொரு குழுவின் முதலமைச் சர்களும் தங்கள் தங்கள் குழுக்களால் கருத்திற்கெடுக்கப்பட்ட விடயங்களை ஜனாதிபதியின் முன் முன்வைத்தார்கள்.