Breaking News

ஐ.நா.வின் விசாரணை அறிக்கை தடம் புரளும் அபாயம்! பேராசிரியர் பிரான்சிஸ் பொய்ல் தெரிவிப்பு

ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் எதிர்­வரும் செம்டெம்பர் மாதம் சமர்­ப் பிக்­கப்­ப­ட­வுள்ள இலங்கை விசா­ரணை அறிக்கை தடம் புர­ளு­கின்ற அபாயம் ஏற்­பட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் பிரான்சி ஸ் பொய்ல் தெரி­வித்­துள்ளார்.

கடந்த காலங்­களில் போலி­யான உள்­ளக விசா­ர­ணை­களும், அனைத்­து­ல­க­மும்-­சம்­பந்­த­ப்பட்ட நாடும் இணைந்­த­தான அர­சியல் சாயம் பூசப்­பட்ட கலப்பு (hybride) விசா­ர­ணை­களும் பல்­வேறு இடங்­களில் நடந்­துள்­ளன எனத் தெரி­வித்­துள்ள பேரா­சி­ரியர் பிரான்சிஸ் பொய்ல், இதுவே இலங்கை விவ­கா­ரத்­திலும் நடக்­கின்ற அபாயம் ஏற்­பட்­டுள்­ள­தெ­னவும் குறிப்­பிட்­டுள்ளார்.

இந்­நி­லையில் இலங்கை விவ­கா­ரத்தில் இனப்­ப­டு­கொ­லை­யா­ளி­களின் பொறுப்­பு­கூ­ற­லுக்கு, அனைத்­து­லக குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் இலங்­கை­யினை பாரப்­ப­டுத்த வேண்­டிய தேவை உள்­ள­தென பேரா­சி­ரியர் பிரான்சிஸ் பொய்ல் மேலும் தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையை அனைத்­து­லக குற்­ற­வியல் நீதி­மன்­றத்தில் பாரப்­ப­டுத்­து­மாறு கோரி நாடு­க­டந்த தமி­ழீழ அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரும் பத்து இலட்சம் கையெ­ழுத்துப் போராட்­டத்தில் தன்­னையும் ஒரு பங்­கா­ள­ராக இணைத்துக் கொண்டு கருத்­து ­ரைக்கும் போதே பேரா­சி­ரியர் பிரான்சிஸ் பொய்ல் மேற்­கு­றித்த கூற்­றினைத் தெரி­வித்­துள்ளார்.

அமெ­ரிக்க பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் பிரான்சிஸ் பொய்ல் 1995 ஆம் ஆண்டு முதல் தமி­ழர்­களின் உரிமைப் போராட்­டத்­துக்­காக குரல் கொடுத்து வருபவர் என்பதோடு, 2009ஆம் தமி ழி னப்படுகொலையினை முன்னிறுத்தி எனும் புத்தகம் ஒன்றினையும் எழுதி யிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.