Breaking News

திஸ்ஸ அத்தநாயக்கவிடம் லஞ்ச ஊழல் விசாரணை

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலர் திஸ்ஸ அத்தநாயக்கவிடம் லஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்ற தேர்தலின் போது ஐ.தே.விலிருந்து சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பக்கம் தாவி மஹிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாகத் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார். அதன்போது திஸ்ஸ அத்தநாயக்காவுக்கு சுகாதார அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. இந்த விடயங்கள் குறித்தே விசாரணைகள் இடம்பெற்று வருவதாகத் தெரியவருகின்றது.