முன்னாள் போராளிகளின் குடும்பத்தினருக்கான உதவித்திட்டங்கள் இம்மாத இறுதியில்
புனர்வாழ்வு வழங்கப்பட்ட முன்னாள் போராளி களின் போராளிகள் குடும்பங்கள், மற்றும் மரணமடைந்த போராளிகளின் குடும்பத் தினரு க்கான
உதவித் திட்டத்தின் தரவு சேகரிக்கும் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன் சேகரிக்கப்பட்ட தரவுகள் அடிப்படையில் உதவிகள் வழங்கும் பொருட்டு விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.
இம்மாத இறுதியில் மீன்பிடித்துறை அமைச்சர் நாடு திரும்பியவுடன் பயனாளிகளை நேரடியாக சந்தித்து பயனாளிகள் ஒவ்வொருவரினதும் தேவைக்கேற்ப பொருத்தமான உதவி திட்டங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்துள்ளார்.