ஒரு தலைமைத்துவத்தின் கீழ் முன்னோக்கி செல்ல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராக வேண்டும்
ஒரு தலைமைத்துவத்தின் கீழ் முன்னோக்கி செல்ல ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தயாராக வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட மாநாடு நேற்று நுவரெலியா மா நகர சபையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
இதன் போது ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில்..
என் மீது நம்பிக்கை வைத்து கட்சியை பொறுப்பளித்துள்ள நிலையில் அனைவருடனும் சேர்ந்து ஒற்றுமையுடன் போட்டியிட்டு அரசாங்கம் ஒன்றை அமைக்கும் தேவையே எனக்கும் உள்ளது, இரண்டு தலைவர்களால் நாட்டை கொண்டு செல்ல முடியாது. ஒரு தலைவருடன் செயற்பட வேண்டும்.