மாவீரர் தினத்தில் அஞ்சலி! மீண்டும் ரவிகரனிடம் விசாரணை
மாவீரர் தினத்தன்று விளக்கேற்றியமைக்காக வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரனிடம் இரண்டாவது தடவையாகவும் நேற்று விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் மாவீரர் தினத்தன்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து கடந்த மே மாதம் 05 ஆம் திகதி முதல் தடவையாக முல்லைத்தீவு பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
அதன்பின்னர் சிவில் உடை தரித்த முல்லைத்தீவு பொலிஸார் நேற்றும் அவரது வீட்டிற்கு சென்று சுமார் ஒன்றரை மணிவரை விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலத்தையும் பெற்றுச் சென்றுள்ளனர்.