Breaking News

லண்டன் பேச்­சில் புலிகள் மீதான தடை நீக்கம் குறித்து பேசப்­பட்­ட­தா? எதிர்க்­கட்­சித்­ த­லைவர் சபையில் கேள்­வி

தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் தொடர்­பு­டைய உலகத் தமிழர் பேர­வை­யுடன் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர லண்டன் நகரில் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இப்­பேச்­சு­வார்த்தை தொடர்பில் அமைச்­ச­ர­வை­யி­னதும் ஜனா­தி­ப­தி­யி­னதும் அல்­லது பிர­த­ம­ரி­னதும் அனு­ம­தியை வெளி­வி­வ­கார அமைச்சர் பெற்­றி­ருந்­தாரா என்று எதிர்க்­கட்சித் தலைவர் நிமல் சிறி­பால டி சில்வா நேற்று சபையில் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

இப்­பேச்­சு­வார்த்­தையின் மூலமாக தேசிய நல்­லி­ணக்­கத்­துக்கு பாதகம் ஏற்­பட்­டுள்ள அதே­வேளை புலிகள் மீதான தடையை நீக்­கு­வது தொடர்­பிலும் பேசப்­பட்­டுள்­ளதா என்ற சந்­தேகம் எழு­வ­தா­கவும் அவர் குறிப்­பிட்டார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வியா­ழக்­கி­ழமை அமர்வின் போது பாரா­ளு­மன்ற நிலை­யியற் கட்­டளை 323 (2) இன் கீழ் கேள்வி எழுப்பி உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கேள்வி எழுப்பி சந்­தேகம் வெளி­யிட்டார்.

இங்கு அவர் மேலும் கூறு­கையில்

தமி­ழீழ விடு­தலைப் புலி­க­ளுக்கு மிகவும் நெருக்­க­மான தொடர்­பு­களை பேணி வரு­கின்­றதும் கடந்த பல வரு­டங்­க­ளாக இலங்­கையின் உள்­ளக விவ­கா­ரங்கள் தொடர்பில் பல்­வேறு கருத்­துக்­களை வெளி­யிட்டும் இலங்­கைக்கு எதி­ராக செயற்­பட்டு வரு­கின்­ற­வர்­க­ளாக புலம்­பெ­யர்ந்த தமி­ழர்­க­ளுடன் பல தொடர்­பு­களைப் பேணி வரு­கின்­றதும் சர்­வ­தேச மட்­டத்தில் இலங்­கையின் நற்­பெ­ய­ருக்கு அவப்­பெ­யரை ஏற்­ப­டுத்தி வரு­வ­து­மான உல­கத்­த­மிழர் பேரவை எனும் அமைப்­புடன் வெளி­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் மங்­கள சம­ர­வீர விஷேட பேச்­சு­வார்த்தை ஒன்றை மேற்­கொண்­டி­ருப்­ப­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

மேலும் இந்த பேச்­சு­வார்த்தை தொடர்­பாக வசதி வாய்ப்­புக்­க­ளையும் ஒத்­து­ழைப்­புக்­க­ளையும் பெற்றுக் கொடுக்கும் நிறு­வ­னங்­க­ளாக தென்­னா­பி­ரிக்க அரச சார்­பற்ற நிறு­வனம் ஒன்றும் அத்­துடன் நோர்­வேயை தள­மாகக் கொண்­டி­யங்கும் நிறு­வனம் ஒன்றும் செயற்­பட்­டுள்­ள­தா­கவும் அதே­நேரம் இலங்கைப் பாரா­ளு­மன்­றத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் கட்­சி­யொன்றின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரும் இப்­பேச்­சு­வார்த்­தையில் கலந்து கொண்­டி­ருந்­த­தாக ஊட­கங்­களில் தக­வல்கள் வெளி­யா­கி­யுள்­ளன.

இங்கு இடம்­பெற்ற பேச்­சு­வார்த்­தையின் நோக்­க­மா­னது 2014மார்ச் மாதம் 21ஆம் திகதி வெளி­யான வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­புடன் தொடர்­பு­பட்ட புலம் பெயர் தமிழ் அமைப்பை தடை செய்யும் விவ­கா­ரத்தை நீக்கிக் கொள்­வ­தற்கும் அதே நேரம் இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக புலம்­பெயர் தமி­ழர்­களால் கூறப்­ப­டு­கின்ற யுத்­தக்­குற்றம் தொடர்பில் நட­வ­டிக்கை எடுக்கும் பொருட்டு இலங்கை அர­சாங்­கத்­துக்கு அழுத்தம் கொடுப்­பதை வலி­யு­றுத்­தி­யுமே இந்த பேச்­சு­வார்த்தை இடம்­பெற்­றி­ருப்­ப­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

மேலும் இப்­பேச்­சு­வார்த்­தையின் போது சமா­தானப் பேச்­சு­வார்த்­தையின் நோர்வே பிர­தி­நி­தி­யான எரிக் சொல்­ஹெய்மும் கலந்து கொண்­டுள்ளார். வெளி­வி­வ­கார அமைச்சர் மேற்­படி உலகத் தமிழர் பேர­வை­யுடன் நடத்­திய பேச்­சு­வார்த்­தையின் நோக்கம் என்ன என்றும் பேசப்­பட்ட விட­யங்கள் குறித்தும் தெரிந்து கொள்­வ­தற்கு நாட்டு மக்­க­ளுக்கு ஆர்­வ­முள்­ளது.

இலங்கை அர­சாங்­கத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்ற நட­வ­டிக்­கைகள் தொடர்பில் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லி­க­ளுடன் தொடர்­பு­களைப் பேணி வரு­கின்ற அமைப்­புடன் பேச்­சு­வார்த்தை நடத்த வேண்­டிய நோக்கம் தொடர்பில் நாட்டு மக்கள் பாரிய அச்­சத்­துக்கும் சந்­தே­கத்­துக்கும் உள்­ளாக்­கப்­பட்­டுள்­ளனர்.

நாட்டு மக்கள் அறிந்­தி­ராத வண்­ணமும் பாரா­ளு­மன்­றத்­துக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் அறி­விக்­காத வண்­ணமும் இவ்­வா­றான பேச்­சு­வார்த்­தையை மேற்­கொண்­டதன் மூலம் தேசிய நல்­லி­ணக்­கத்தைக் கட்­டி­யெ­ழுப்பும் செயற்­பாட்­டுக்கு முட்­டுக்­கட்­டை­யாக அமையும் என்­பதை தெரி­வித்துக் கொள்­கிறேன்.

அந்த வகையில் வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர லண்­டனில் உலகத் தமிழ்ப் பேர­வை­யுடன் மேற்­கொண்ட பேச்­சு­வார்த்­தையின் நோக்கம் பேசப்­பட்ட விட­யங்கள் என்ன என்­பது குறித்தும் இந்தப் பேச்­சு­வார்த்­தையில் பங்­கேற்­றி­ருந்த பிர­தி­நி­திகள் மற்றும் அமைப்­புக்கள் தொடர்­பிலும் தெளி­வு­ப­டுத்த வேண்டும்.

மேலும் இவ்­வா­றா­ன­தொரு பேச்­சு­வார்த்­தையில் கலந்து கொள்­வது தொடர்பில் வெளி­வி­வ­கார அமைச்­ச­ரா­னவர் அமைச்­ச­ர­வை­யி­னதோ ஜனா­தி­ப­தி­யி­னதோ அல்­லது பிர­த­ம­ரி­னதோ அனு­ம­தியைப் பெற்­றி­ருந்­தாரா?

இப்­பேச்­சு­வார்த்­தையின் போது தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் தடையை நீக்­கு­வ­தற்கு அல்­லது தடை செய்­யப்­பட்ட புலி அமைப்­பிடம் இருந்து உதவி ஒத்துழைப்பை வழங்குவதற்கு அல்லது புலிகளை தடை செய்திருப்பதான வர்த்தமானி அறிவித்தலை நீக்குவது தொடர்பில் பேசப்பட்டதா என்பது தொடர்பிலும்,

யுத்த குற்றம் தொடர்பில் இங்கு பேசப்பட்டதா என்பது குறித்தும் அத்துடன் இந்த பேச்சுவார்த்தை தொடர்பிலும் பூரணத்துவமான அறிவிப்பினை வெளிவிவகார அமைச்சர் வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். எதிர்க்கட்சித் தலைவரின் கேள்விகளுக்கான பதில் இன்று வெள்ளிக்கிழமை வழங்கப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லஷ்மன் கிரியெல்ல இதன்போது தெரிவித்தார்.