Breaking News

பொறுப்­புக்­கூற­லுக்­கான உள்­நாட்­டு பொறி­மு­றை செப்­டெம்­ப­ருக்குள் உரு­வாக்­கப்­பட வேண்­டும்

இலங்கை தொடர்­பான ஐ.நா. அறிக்கை செப்­டெம்பர் மாதக் கூட்­டத்­தொ­டரில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­மென ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் சயிட் அல்­ஹுசேன் மீள உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்­கத்­துக்­கான இலங்கை அர­சாங்­கத்தின் உள்­நாட்டுப் பொறி­முறை, எதிர்வரும் செப்­டெம்பர் கூட்­டத்­தொ­ட­ருக்கு முன்னர் உரு­வாக்­கப்­பட வேண்டும் என்ற

எதிர்­பார்­பி­னையும் அவர் வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார்.

ஜெனி­வாவில் நேற்று ஆரம்­ப­மா­கி­யுள்ள ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையின் 29 ஆவது அமர்வின் தொடக்க உரை­யின்­போதே அவர் இதனைத் தெரி­வித்­துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் சயிட் அல்­ஹு­சேனின் உரையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

இலங்­கையின் புதிய அர­சாங்கம், அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை நிறை­வேற்­றி­யுள்­ளது. இந்த சட்டம் முறை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டால், ஜன­நா­யகம் மற்றும் சட்­டத்தின் ஆட்சி மீளப் புதுப்­பிக்­கப்­படும் என்ற நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும்.

பொறுப்­புக்­கூறல் மற்றும் நல்­லி­ணக்கம் தொடர்­பாக நம்­ப­க­மான பொறி­மு­றை­களை உரு­வாக்கும் போது, வெளிப்­ப­டைத்­தன்மை மற்றும் அனைத்­தையும் உள்­ள­டக்­கி­ய­தாக இருக்க வேண்டும் என்­பது தொடர்­பாக, இலங்கை அதி­கா­ரி­க­ளுடன், ஐ.நா. மனித உரி­மைகள் ஆணையம், தொடர்ந்து கலந்­து­ரை­யா­டல்­களில் ஈடு­படும்.

இந்தப் பொறி­முறை வரும் செப்­டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் பணி­ய­கத்தின் அறிக்கை வெளி­யி­டப்­ப­டு­வ­தற்கு முன்னர் உரு­வாக்­கப்­படும் என்று எதிர்­பார்க்­கிறேன்.

அர­சியல் கட்­சிகள், சிவில் சமூ­கத்­துடன் பர­வ­லான ஆலோ­ச­னை­களை நடத்­தவும், பாதிக்­கப்­பட்ட அனை­வ­ரதும், அவர்­க­ளி­னது குடும்­பங்­க­ளி­னதும் முழு­மை­யான தேசிய ஆத­ரவை உறு­திப்­ப­டுத்­தவும், இந்த செயல்­மு­றையின் உரி­மையை உறுதி செய்­வ­தற்கும், இலங்கை அர­சாங்­கத்தை ஊக்­கு­விப்­ப­தா­கவும் ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் சயிட் அல்­ஹுசேன் ுசேன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் மற்றும் தமிழர் அமைப்பு பிரதிநிதிகள் பலரும் பங்கெடுத்துள்ளனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.