மாற்றத்துக்காக உயிரையும் மாய்ப்பேன் :சூளுரைக்கிறார் மைத்திரி
அரசியல் மற்றும் சமூக மாற்றத்துக்காக எஸ்.டபிள்யு.ஆர்.டீ.பண்டார நாயக்க செய்த தியாகத்தை எமது நாடு மீண்டும் வேண்டி நிற்கிறது. நாட்டுக்கு தேவையான மாற்றங்களைக் கொண்டு வர எனது உயிரையும் தியாகம் செய்ய நான் தயார். இவ்வாறு சூளுரைத்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
தம்பதெனியவில் இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்தார். சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பொதுத் தேர்தல் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்குடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அந்த நிகழ்வு பிளவுபட்டு நிற்காமல் கட்சியினர் அனைவரும் ஒரே அணியாக ஒன்றுபட்டு நிற்கவேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.அப்போது தான் வெற்றியைப் பெறமடியும் என்று அவர் வலியுறுத்தினார்.