Breaking News

நாங்கள் அரசிடமிருந்து பணம் பெறவில்லை : மாவை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெற்குக்கு அழைக்கப்பட்டு அரசாங்கத் தரப்பினரால் நிதி வழங்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசுக் கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார். 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பு, தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. 

சந்திப்பினையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தெரிவிக்கையில், 


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தெற்குக்கு அழைக்கப்பட்டு அரசாங்கத் தரப்பினரால் நிதி வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.  எனினும் குறித்த செய்தியில் உண்மையில். இது தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் க.வி விக்னேஸ்வரனுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பவுள்ளேன். 

இவ்விடயம் தொடர்பில் அறியவேண்டும் எனக்கேட்டுள்ளேன். அவருடைய பதிலைப் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டு உண்மையான விடயத்தை தெரிவிப்போம் என்றார்.