மக்கள் எழுச்சியை தடுப்பதாயின் சமூகசேவை உத்தியோகத்தரின் கொலையாளியை கைதுசெய்யவும்.
மக்கள் எழுச்சியை தடுக்க வேண்டுமானால் மண்டூரில் சமூக சேவை உத்தியோகத்தரை படுகொலை செய்த கொலையாளியை கைதுசெய்ய வேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றோம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் கடந்த திங்கட்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணியின் பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், சமூகசேவை உத்தியோகத்தர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சமூக முன்னேற்றத்திற்காக சமூக சீரழிவுகளுக்கு எதிராக உழைத்த நன்மதிப்பை பெற்ற உயர்ந்த அதிகாரியாக அவர் திகழ்கின்றார்.
அவர் கொலை செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் கடந்து விட்டன. இந்நிலையில் அவரை கொலை செய்தவரை இன்னும் பொலிஸார் கைது செய்யாமலிருப்பது ஆச்சரியமாக இருக்கின்றது.
இன்று வடக்கு, கிழக்கில் கொலைகள் மட்டுமல்ல வன்புணர்ச்சி, போதைவஸ்து வியாபாரம் இப்படியான சம்பவங்கள் நிறைந்திருக்கின்றன.
அரசாங்கம், ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ் மா அதிபர் ஆகியோர் இப்படியான குற்றவாளிகளை கைதுசெய்து அவர்கள் தண்டிக்கப்படவேண்டுமென்பதை வலியுறுத்தி போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின் றன.
அதில் ஒரு அங்கமாக மட்டக்களப்பில் இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடைபெற்றது. பேரணியாக வந்து மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளோம்.எனக்கு மட்டக்களப்பு 1978ஆம் ஆண்டு நினைவுக்கு வருகின்றது. எத்தனையோ பெரிய போராட்டங் கள் இந்த மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளன.
மட்டக்களப்பு சிறையிலே ஒரு வருடம் இருந்த காலம் மிகப் பெரிய எழுச்சியாக போராட்டங்கள் இங்கு நடைபெற்றன. அதன் பின்னர் மட்டக்களப்பில் இப்படியான ஒரு போராட்டத்தில் கலந்துகொள்வதையிட்டு ஆறுதல் அடைகின்றேன்.
இன்று வடக்கு, கிழக்கில் இப்படியான கொலை, வன்புணர்வுகள், போதைவஸ்து, வியாபாரம் மற்றும் போதைவஸ்தை பாவித்து விட்டு கொலைகள் செய்யப்படு வதையும், அதன் சூத்திரதாரிகள் கைது செய்யப்படுவதையும் ஒரு நல்லாட்சி என்ற அரசாங்கம் பொது மக்களால் உரு வாக்கப்பட்ட இந்த அரசாங்கம் தாமதிப் பதை அனுமதிக்க முடியாது என்றும் கூறி னார்.