Breaking News

"உள்­ளக விசா­ர­ணைப்­பொ­றி­முறை அறிக்கை செப்­டெம்­பரில் சமர்ப்­பிப்பு''

யுத்தக் குற்றம் தொடர்­பாக நிறு­வப்­பட்­டுள்ள உள்­ளக பொறி­மு­றையின் கீழான அறிக்கை எதிர்­வரும் செப்­டெம்பர் மாதத்தில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும் என்று வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர நேற்று சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தின் நேற்று வெள்­ளிக்­கி­ழமை அமர்வின் போது எதிர்க்­கட்சி எம்.பி. யான பேரா­சி­ரியர் ஜி.எல். பிரீ­ஸினால் எழுப்­பப்­பட்ட கேள்­விக்குப் பதி­ல­ளிக்கும் வகை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

முன்­ன­தாக கேள்வி எழுப்­பிய பீரிஸ் எம்.பி. உள்­ளக விசா­ரணை எனும் பொறி­முறை தொடர்­பி­லான காலம் செப்­டெம்பர் மாதத்தில் இறு­தி­யா­கின்­றது. இந்­நி­லையில் இவ்­வி­வ­காரம் தொடர்பில் அர­சாங்­கத்தின் செயற்­பாடு எந்­த­ளவில் இருக்­கி­றது எனக்­கேட்டார்.

இதன்­போது பதி­ல­ளித்த வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ர­வீர மேலும் கூறு­கையில்

ஜன­வரி மாதம் 8 ஆம் திகதி இடம்­பெற்ற தேர்­தலின் பின்னர் ஏற்­க­னவே எம்மால் அறி­விக்­கப்­பட்­டி­ருந்த 100 நாள் வேலைத்­திட்­டத்தின் 93 ஆம் பிரிவின் பிர­காரம் செயற்­பட்டு நீதி­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்றோம். இதன் பிர­காரம் யுத்தக் குற்றம் தொடர்பில் நாம் உள்­ளக விசா­ரணைப் பொறி­மு­றை­யொன்றை ஸ்தாபித்­துள்ளோம். அதன் நட­வ­டிக்­கைகள் இடம்­பெற்று வரு­கின்­றன.

அத்­துடன் நாம் உறு­தி­ய­ளித்­தது போலவே எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் உள்ளக விசாரணைப் பொறி முறை தொடர்பான அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம் என்றார்.