Breaking News

புலி­களின் தேவை­க­ளுக்­காக எம்மை சிறைக்­கூண்­டு­களில் அடைக்­கின்­றார்கள் - மஹிந்த ஆதங்­கம்

நான் யாழ்ப்­பாணம் சென்றேன். கிழக்கு மாகாணம் சென்றேன். ஆனால் அங்­கெல்லாம் எனக்­கெ­தி­ராக கறுப்பு கொடிகள் பறக்­க­வி­டப்­ப­ட­வில்லை.

ஆனால் பொலன்ன­று­வையில் எனக்­கெ­தி­ராக கறுப்­புக்­கொ­டிகள் பறக்க விடப்­பட்­டுள்­ளன. ஒரு சிலரின் தேவைக்­காக மேற்­கொள்­ளப்­பட்ட முட்டாள் தன­மான செயல் இது­வாகும் எனத்­தெ­ரித்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச, புலி­களின் தேவை­க­ளுக்­காக எம்மை சிறைக்­கூண்­டு­களில் அடைக்­கின்­றார்கள் என்றும் கூறி­யுள்ளார்.

பொலன்­ன­றுவை வெலி­கந்த ஸ்ரீ சுதர்­ஷன விஹா­ரையில் புதன்­கி­ழமை இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ச இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இங்கு முன்னாள் ஜனா­தி­பதி மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

மக்கள் ஆணை­யில்லா ரணி­லுக்கு முது­கெ­லும்­பி­ருக்­கு­மானால் சுய­நம்­பிக்கை இருக்­கு­மானால் பாரா­ளு­மன்­றத்தை கலைத்து பொதுத்­தேர்­தலை நடத்த வேண்­டு­மென சவால் விடுக்­கின்றேன்.

நாட்டில் அனைத்து பிர­தே­சங்­க­ளிலும் வெள்­ளைக்­கொ­டிகள் பறந்த காலம் ஒன்­றி­ருந்­தது. அந்த யுகத்­திற்கு 2009 ஆம் ஆண்டு நாம் முற்­றுப்­புள்ளி வைத்தோம். நான் யாழ்ப்­பாணம் சென்றேன். கிழக்கு மாகா­ணத்­திற்கு விஜயம் செய்தேன். ஆனால் கறுப்­புக்­கொ­டிகள் பறக்க விடப்­ப­ட­வில்லை.

ஆனால் இன்று பொலன்­ன­று­வையில் ஒரு சிலரின் தேவை­க­ளுக்­காக கறுப்பு கொடிகள் பறக்க விடப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான முட்டாள் தன­மான செயல்­களை மேற்­கொள்ள வேண்டாம். கீழ்த்­த­ர­மான விதத்தில் இன்று நாம் பழி­வாங்­கப்­ப­டு­கின்றோம். சேறு பூசு­கி­றார்கள். இவற்­றை­யெல்லாம் பொறுத்­துக்­கொண்­டி­ருந்தேன்.

சர்­வ­தேச நீதி­மன்­றங்­க­ளுக்கு எம்மை கொண்டு செல்­வார்­களாம். புலி­களின் தேவை­க­ளுக்­காக எம்­ம­வர்கள் சிறையில் அடைக்­கப்­ப­டு­கி­றார்கள். நிதிக்­குற்­ற­வியல் பிரி­வென அவர்­க­ளுக்கும் தேவை­யான விதத்தில் ஓர் பிரிவை ஏற்­ப­டுத்தி கொண்டு அவர்­க­ளுக்கு பிடிக்­கா­த­வர்­களை விசா­ரிக்­கி­றார்கள். கைது செய்­கி­றார்கள்.

இந்த நிதிக்­குற்­ற­வியல் பிரிவு சட்ட ரீதி­யா­ன­தல்ல.உத­வி­களை செய்­தாலும் சமுர்த்­தியை வழங்­கி­னாலும் இது குற்­றச்­செ­ய­லா­கவே நோக்­கப்­ப­டு­கின்­றது. உலகில் அதி­வே­க­மாக அபி­வி­ருத்­தி­ய­டைந்து வரும் நக­ர­மாக கொழும்பு நகரை மாற்­றி­ய­மைத்தோம். இது போன்று முழு நாட்­டையும் அபி­வி­ருத்தி செய்­வ­தற்கு திட்­டங்­களை தயா­ரித்தோம்.

அம்­பாந்­தோட்­டையில் துறை­மு­கத்தை அமைத்தோம் இன்று அது தனி­யா­ருக்கு வழங்­கப்­ப­ட­வுள்­ளதாம். பராக்­கி­ரம சமுத்­தி­ரத்தில் துறை­மு­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றார்கள். இன்று அங்­கி­ருந்த பட­கையும் காண­வில்லை. எம்மால் விகா­ரை­க­ளுக்கு செல்ல முடி­ய­வில்லை. மின்­சாரம் துண்­டிக்­கப்­ப­டு­கி­றது. நீர் விநி­யோகம் தடை செய்­யப்­ப­டு­கி­றது. ஒரு சிலரின் தேவை­க­ளுக்­காக கறுப்பு கொடிகள் பறக்­க­வி­டப்­ப­டு­கின்­றன.

பொலன்­ன­று­வையில் விவ­சா­யத்­த­லை­வ­ரொ­ருவர் நாட்டில் தலை­வ­ரா­ன­போது நாம் மகிழ்ச்­சி­ய­டைந்தோம். ஆனால் இன்று மக்கள் ஆணை­யில்­லாத ரணில் குழு­வி­ன­ரோடு இணைந்து எம்மை சிறையில் அடைத்து ஊழல் மோச­டிக்­கா­ரர்கள் என்ற முத்­திரை குத்­து­வ­தற்கு முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

இதனை தொலைக்­காட்­சி­களில் பத்­தி­ரி­கை­களில் விசேட செய்­தி­களில் காண்­பிக்­கப்­ப­டு­கின்­றது. இது தான் இன்­றைய நல்­லாட்­சியா? நான் இன்று இந்த விகா­ரைக்கு விஜயம் செய்­வதை தடுப்­ப­தற்­காக விகா­ரை­க­ளுக்கு ரூபா 20 இலட்சம் வழங்க முன்­வந்­துள்ளோம். ஆனால் விகாராதிபதிகள் அதனை பெற்றுக்கொள்ள மறுத்து விட்டார்கள். அந்தளவிற்கு இந்த அரசாங்கம் என்னை கண்டு பயந்து போயுள்ளது. 

எனவே உடனடியாக பாராளுமன்றத்தை கலைக்கவும் பொதுத்தேர்தலை நடத்தவும் இதற்கு முகம்கொடுப்பதற்கு எப்போதும் நாம் தயாராகவே உள்ளோம் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகின்றேன் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.