Breaking News

ஊழல்­களை மூடி­ம­றைப்­ப­தற்கு புலி மந்­தி­ரத்தை மீண்டும் கூறு­கிறார் மஹிந்­த - கபீர் ஹாசிம் விச­னம்

வடக்கில் 59 இரா­ணுவ முகாம்­களை விடு­வித்­தது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவே ஆவார். 

முன்னாள் ஜனா­தி­ப­தியின் குற்­றச்­சாட்டின் படி தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் 59 முகாம்கள் விடு­விக்­கப்­பட்­டி­ருந்தால் அவை எந்த முகாம்கள் என்­ப­தனை அவர் நாட்டு மக்­க­ளுக்கு உட­ன­டி­யாக வெளிப்ப­டுத்த வேண்டும் என்­று ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷீம் சவால் விடுத்­துள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தன்­னு­டைய ஊழல்­களை மூடி­ம­றைப்­ப­தற்­காக மீளவும் புலி மந்­தி­ரத்தை ஜெபம் செய்ய ஆரம்­பித்­துள்ளார். எனினும் அடுத்த பாரா­ளு­மன்ற தேர்­தலின் போது மஹிந்­த­விற்கு இறுதி பாடம் புகட்­டுவோம் என்றும் அவர் எச்­ச­ரிக்கை விடுத்­துள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ மாத்­தறையில் நடை­பெற்­ற கூட்­டத்­திற்கு விடுத்­தி­ருந்த அறிக்­கைக்கு மறுப்பு தெரி­விக்கும் வகையில் பொதுச் செய­லாளர் கபீர் ஹாஷிம் நேற்று ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார்.

அந்த அறிக்­கையில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது.

ஜன­வரி 8 ஆம் திகதி மக்­களின் புரட்­சி­யினால் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்­சி­யி­லி­ருந்து தூக்கி எறி­யப்­பட்டார். எனினும் மக்­களினால் நிரா­க­ரிக்­கப்­பட்ட போதிலும் மாயையையும் வதந்­தி­யையும் கொண்டு நாட்டை குழப்­பத்­திற்கு அவர் உள்­ளாக்கி வரு­கிறார்.

நாட்­டி­லுள்ள விகாரை வாயி­லாக சென்று நல்­லாட்­சி­மிக்க ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான அர­சாங்­கத்தை விமர்­சனம் செய்து பிர­ப­ல­மா­ன­வ­ராக மக்கள் முன் அவ­தாரம் எடுப்­ப­தற்கே அவர் இவ்­வாறு செயற்­பட்­டு­வ­ரு­கிறார்.

கடந்த வெள்ளிக்­கி­ழமை மாத்­த­றையில் நடைப்­பெற்ற கூட்­டத்தின் போது புலிகள் மீள­வும் உரு­வா­கப்­போ­வ­தா­கவும், வடக்கில் 59 இரா­ணுவ முகாம்கள் அகற்­றப்­பட்­டுள்­ள­தா­கவும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ இரா­ணுவ வீரர்­க­ளுக்கு அகௌ­ரவம் ஏற்­ப­டுத்தும் வகையில் அறிக்கை விடுத்­துள்ளார்.

முன்னாள் ஜனா­தி­பதி மலர் மாலை­களை கையில் ஏந்திய வண்ணம் விகா­ரைகள் வாயி­லாக சென்று இவ்­வாறு செயற்­ப­டு­வது கவ­லைக்­கு­ரி­ய­தாகும். தன்­னு­டைய ஊழல் ,மோச­டி­களை முடி­ம­றைப்­ப­தற்­காக மீளவும் புலி மந்­தி­ரத்தை ஜெபம் செய்ய தொடங்­கி­யுள்ளார். ஊட­கத்தின் வாயி­லாக வதந்­தி­களை பரப்பி தற்­கா­லி­க­மாக பிர­தமர் கனவு கண்டு வரு­கிறார்.

எவ்­வா­றா­யினும் வடக்கில் 59 இரா­ணுவ முகாம்­களை விடு­வித்­தது முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவே ஆவர். அதற்கு மாறாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அர­சாங்­கத்­தினால் எந்த வொரு முகாம்­களும் விடு­விக்­கப்­ப­ட­வல்லை.

அதே­போன்று வடக்கில் 11 ஆயிரம் ஏக்கர் காணி­களை விடு­வித்­ததும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தலை­மை­யி­லான அர­சாங்­கமேயாகும். புதிய அர­சினால் 1000 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டது. மேலும் சம்பூர் காணி­க­ளையும் மஹிந்த ஆட்­சியே விடு­வித்­தது.

முன்னாள் ஜனா­தி­ப­தியின் குற்­றச்­சாட்டின் பிர­காரம் தற்­போ­தைய அர­சாங்­கத்­தினால் 59 முகாம்கள் விடு­விக்­கப்­பட்­டி­ருந்தால் அது எந்த முகாம் என்­ப­தனை முன்னாள் ஜனா­தி­பதி நாட்டு மக்­க­ளுக்கு உட­ன­டி­யாக வெ ளி ப்­ப­டுத்த வேண்டும்.

அர­சாங்கம் விடு­வித்த எந்­த­வொரு சவால்­க­ளுக்கும் அவர் உரிய வகையில் பதில் அளிப்­ப­தற்கு முன்­வ­ர­வில்லை. வீதி அபிவிருத்திக்காக தேசிய சேமிப்பு வங்கியினால் பெறப்பட்ட 55 பில்லியன் ரூபாவில் 28 பில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்தது என்பது இன்னும் இரகசியமாகவே உள்ளது.

எனவே அடுத்த பாராளுமன்ற தேர்தலின் போது மக்களினால் நிராகரிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விற்கு இறுதி பாடம் புகுட்டுவோம் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்