தேர்தல் நடந்தால் மக்கள் நம்பிக்கை யார் மீது என தெரியவரும்..!
எந்த ஒரு இதய சுத்தியுடனும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வரப்படவில்லை எனவும், அந்தப் பொறுப்பை பொதுமக்களிடம் கையளித்து பொதுத்தேர்தல் ஒன்றுக்கு சென்றால் நம்பிக்கை யார் மீது உள்ளது என்பதை அறிந்து கொள்ள முடியும் என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஸ்ரீகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இந்த வருட இறுதியில் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்வார் எனவும் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் உள்ள அமெரிக்க உயர்ஸ்தானிகராலயம் பராக் ஒபாமாவின் இலங்கை விஜயம் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதுவும் விடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.