Breaking News

ஆப்கான் பாராளுமன்ற தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்!

ஆப்கானிஸ்தான் பாராளுமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்டனம் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில், இத்தாக்குதலானது மிகவும் வெறுக்கத்தக்க பயங்கரவாதச் செயல் என கூறியுள்ளார். 

பயங்கரவாதத்தினை ஒழித்து நாட்டின் குடியுரிமைக்கு பங்கம் விளைவிக்கும் செயல்களை இல்லாதொழிப்பது குறித்து அனைவரது பங்களிப்பு தொடர்பில் ஜனாதிபதி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். 

´பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய கூட்டமைப்பு (SAARC) என்னும் வகையில் ஆப்கான் பாராளுமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை நான் வன்மையாகக் கண்டிக்கின்றேன். இது மிகவும் வெறுக்கத்தக்கதொரு பயங்கரவாதச் செயலாகும். 

இவ்வாறான தாக்குதல்கள் நாட்டின் குடியுரிமையைச் சீர்குலைக்கும் செயற்பாடுகளாகும். அத்துடன் இவர்களுக்கு எதிராக போராடும் ஆப்கான் இராணவத்தினர் எந்த வகையிலும் எந்த நேரத்திலும் பின்வாங்க கூடாது. 

பயங்கரவாதத்துக்கு எதிராக மூன்று தசாப்தங்களாக போராடி இன்று அதனை வெற்றிகரமாக முற்றாக ஒழித்துவிட்டு அனைத்து மக்களும் ஒன்றிணைந்து இன்று நிம்மதியுடன் வாழ்கின்றோம். அவ்வகையில் பயங்கரவாதத்தின் வடுக்கள் வேதனைகள் என்ன என்பது பற்றி தௌிவாக அறிந்த நாடு என்ற வகையில், இத்தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் குடும்பத்தினர் என அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். 

அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் விரைவில் குணமாகவும் இறைவனை பிரார்த்திக்கிறோம்´ என ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.