Breaking News

இலங்கை அகதிகளுக்கு ஒதுக்கப்பட்ட காணி அபகரிப்பு!

கொடைக்கானல் அருகே இலங்கை அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்பு நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என இலங்கை அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே குண்டுப்பட்டி கிராமத்தில் 500 இலங்கைத் தமிழ்க் குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டன. இவர்கள் குடியிருக்க 8 கிராமங்கள் உருவாக்கப்பட்டன. 

இதில் பி காலனி கிராமத்திற்காக ஒதுக்கப்பட்ட 8 ஏக்கரில் 4 ஏக்கர் நிலத்தை அந்த பகுதியில் உள்ள நில உரிமையாளர்களின் ஆக்ரமிப்பு செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 

மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து கொடைக்கானல் கோட்டாட்சியரிடம் கேட்டபோது கிராம நிர்வாக அலுவலரை வைத்து ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.