ஆப்கான் தாக்குதல் : மோடி கண்டனம்
ஆப்கானிஸ்தான் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தமது கடுங் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள நாடாளுமன்றதின் மீது நேற்று காலை தீவிரவாதிகள் தாக்குதல் மேற்கொண்டனர். நாடாளுமன்ற அமர்வு இடம்பெற்ற வேளையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
எனினும் தாக்குதலை மேற்கொண்ட 6 தீவிரவாதிகளும் இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த நிலையில், இந்த தாக்குதலை ஒரு கோழைத்தனமான தாக்குதல் என்று இந்திய பிரமதர் குறிப்பிட்டுள்ளார்.
தமது டுவிட்டர் தளத்தில் இது குறித்து குறிப்பிட்டுள்ள அவர், இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களுக்காக பிரார்த்திப்பதாகவும் மோடி தெரிவித்துள்ளார்