இலங்கை அகதி திருச்சி சிறப்பு முகாமில் தாக்கப்பட்டார்!
திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 39 வயதான வை.ஸ்ரீஜெயன் எனும் இலங்கை தமிழர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாகவும் அதே சிறப்பு முகாமில் உள்ள ஈ.ஈஸ்வரன் மற்றும் பீ.சிவசங்கரன் ஆகியோரே ஸ்ரீஜெயனை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கு இலக்கான இலங்கையர் மகாத்மா காந்தி வைத்தியசாலையில் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பணக்கொடுக்கல் வாங்கலே தாக்குதலுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலை மேற்கொண்டவர்கள் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.