நாடாளுமன்றம் நாளை கலைக்கப்படுவதற்கான சாத்தியம்..?
நாடாளுமன்றம் நாளைய தினம் கலைக்கப்படுவதற்கான சாத்தியக் கூறுகள் காணப்படுவதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன.
எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் புதிய அரசாங்கம் ஆட்சியமைக்கும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார். இந்தநிலையிலேயே நாளைய தினம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதாக தற்போது அரசியல் வட்டாரங்களிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
20 வது திருத்தச்சட்டம் தொடர்பிலான ஒத்திவைப்பு விவாதம் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 20 வது திருத்தச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எனினும் நாடாளுமன்றத்தில் 20 வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்படுவதில் சிக்கலான நிலை காணப்படுவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எது எவ்வாறாயினும் நாளைய தினம் நாடாளுமன்றம் கலைக்கப்படுவது உறுதியாகியுள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகியுள்ளன