Breaking News

20க்கு எதிராக சபையில் வாக்களிப்பு வர்த்தகமானியில் பிரசுரித்தால் வழக்கு - ஹக்கீம் அதிரடி

பல சிறு­பான்மைக் கட்­சி­க­ளி­னதும், சிறு கட்­சி­க­ளி­னதும் எதிர்ப்­பையும் மீறி 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம் தற்­பொ­ழுது தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. 

இந்த 20 ஆவது அர­சி­ய­ல­மைப்பு சீர்­தி­ருத்தம் பாரா­ளு­மன்­றத்­துக்கு கொண்­டு­வ­ரப்­ப­டு­மா னால், அதற்கு எதி­ராக நாம் வாக்­க­ளிப்போம். மேலும் இதேவடிவில் வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­ப­டு­மானால் நாம் உயர்­நீ­தி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்வோம் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் தலை­வரும், நகர அபி­வி­ருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடி­கா­ல­மைப்பு அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் தெரி­வித்தார்.

மாத்­தளை நகர அபி­வி­ருத்தி திட்­டங்கள் தொடர்­பாக உய­ர­தி­கா­ரி­க­ளுடன் மாந­கர சபை கேட்போர் கூடத்தில் நேற்று (13) முற்­பகல் நடை­பெற்ற கூட்­டத்தின் பின்னர் ஊட­க­வி­ய­லா­ளர்கள், தற்­போ­தைய அர­சியல் நிலை­வரம் குறித்து கேள்­வி­யெ­ழுப்­பிய போதே முஸ்லிம் காங்­கிரஸ் தலைவர் அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார்.

அமைச்சர் ஹக்கீம் அங்கு மேலும் தெரி­வித்­த­தா­வது,

அர­சி­ய­ல­மைப்பின் 20ஆவது திருத்த சட்ட வரைவு இந்த நாட்டில் புதிய தேர்தல் முறை­யொன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்­காக கடந்த தேர்­தலின் போது ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மக்­க­ளுக்கு அளித்த வாக்­கு­று­தியை நிறை­வேற்றும் முக­மாக கொண்­டு­வ­ரப்­ப­டு­கி­றது. விருப்பு வாக்கு முறையை முழு­மை­யாக நீக்­கு­வ­தற்கும், தொகு­தி­வாரி தேர்தல் முறை­மையைச் சேர்த்து, விகி­தா­சார தேர்தல் முறையில் கலந்த ஒரு முறையை கொண்­ட­தாக புதிய தேர்தல் முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற முயற்­சியின் போது வெள்­ளிக்­கி­ழமை (12) அமைச்­ச­ர­வையில் கார­சா­ர­மான வாக்­கு­வாதம் எங்­க­ளுக்கும் அமைச்­சர்கள் சில­ருக்­கு­மி­டையில் ஏற்­பட்­டது.

அதற்கு முன்­னைய தினம் 18 சிறு­பான்­மை­யினக் கட்­சிகள், சிறிய கட்­சிகள் இணைந்து இந்த விட­யத்தில் ஒரு­மித்த தீர்­மா­னத்­திற்கு வந்­தி­ருந்­தன. புதிய தேர்தல் முறையில் இரட்டை வாக்குச் சீட்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்­லை­யென்றால், அதனை ஆத­ரிக்­க­மாட்டோம் என்ற தெளி­வான முடி­வோடு அமைச்­ச­ர­வையில் நாங்கள் கடு­மை­யாக வாதா­டினோம்.

அதையும் மீறி, எங்­க­ளது கோரிக்­கையை கவ­னத்தில் எடுக்­காமல் புதிய தேர்தல் முறை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­ப­டு­மானால் நாங்கள் எல்­லோரும் அதனை எதிர்த்து வாக்­க­ளிப்­ப­தற்கு தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம்.

நேற்று முன்­தினம் ஐக்­கிய தேசியக் கட்சி செயற்­குழு கூட்­டத்தின் போதும் ஆச­னங்­களை அதி­க­ரிப்­பதன் தீர்­மா­னத்­திற்கு அக்­கட்சி உடன்­ப­ட­மாட்­டாது என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அதே­வேளை, பாரா­ளு­மன்­றத்­திற்கு சட்­ட­மூ­ல­மாக அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டு­வது குறித்து தனது ஆட்­சே­ப­னையை அக்­கட்­சியின் செயற்­குழு மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­கவும் அறி­கிறோம்.

அந்த அடிப்­ப­டையில் அவ­சர அவ­ச­ர­மாக இந்த தேர்தல் திருத்தம் சிறு­பான்மைக் கட்­சி­களும், சிறிய கட்­சிகள் பலவும் ஒன்­றி­ணைந்து இந்த இரட்டை வாக்குச் சீட்டு என்ற விட­யத்தில் இறுக்­க­மான நிலைப்­பாட்டில் இருக்­கின்ற கார­ணத்­தினால், அதை உதா­சீனம் செய்து அறி­முகம் செய்­கின்ற ஒரு தேர்தல் முறை எந்த விதத்­திலும் சாத்­தி­ய­மா­காது என்­பதை மிகவும் தெளி­வாக நாங்கள் சொல்லி வைக்­கின்றோம்.

இறு­தியில், இரண்டு பெரிய கட்­சிகள் மட்டும் தேர்தல் செய்­வ­தற்கு அனு­ம­திக்­கின்­ற­தாக இந்தத் தேர்தல் முறை வந்­து­விடும் என்ற கார­ணத்­தினால் எங்­க­ளது பலத்த ஆட்­சே­ப­னையை நாங்கள் தெரி­விக்­கின்றோம். நானும், அமைச்­சர்­க­ளான பழனி திகாம்­பரம், ரிசாத் பதி­யுதீன் ஆகி­யோரும் இந்த விட­யத்தில் ஒரு­மித்த நிலைப்­பாட்டில் இருக்­கின்றோம். மீண்­டு­மொரு முறை ஜனா­தி­பதி சிறு­பான்­மை­யினக் கட்­சிகள், சிறிய கட்­சிகள் ஆகி­ய­வற்றின் சந்­திப்­புக்கு முன்­வந்து உரிய மாற்­றத்­திற்கு இட­ம­ளிப்பார் என நம்­பு­கின்றோம்.

இந்த 20ஆவது திருத்­தத்தை பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­று­வ­தற்கு மூன்றில் இரண்டு பெரும்­பான்மை அவ­சி­ய­மாகும். ஆகையால் அதற்கு எதி­ரான நிலைப்­பாட்டை நாங்கள் எடுக்க நேரிடும் என்று திட்­ட­வட்­ட­மாக அமைச்­ச­ர­வையில் கூறி­யி­ருக்­கின்றோம். அத்­துடன், எங்­க­ளது எதிர்ப்­புக்கு மத்­தியில் இதற்­கான சட்­ட­வ­ரைவு வர்த்­த­மா­னியில் பிர­சு­ரிக்­கப்­பட்­டாலும் அதனை எதிர்த்து உயர் நீதி­மன்­றத்தில் வழக்குத் தாக்கல் செய்­வ­தா­கவும் நாங்கள் தீர்­மா­னித்­தி­ருக்­கின்றோம் என்றார்.

இந்த 20ஆவது திருத்­தத்தை உங்­களால் தோற்­டிக்க முடி­யுமா என ஊட­க­வி­ய­லாளர் ஒருவர் கேட்­ட­போது, தோற்­க­டிப்­ப­தென்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, இந்தச் செயற்­பாடு இந்­நாட்டு சிறு­பான்மை சமூ­கங்­க­ளுக்கும், சிறிய கட்­சி­க­ளுக்கும் எதி­ரான ஜன­நா­யக விரோத நட­வ­டிக்­கை­யென்று அமைச்சர் ஹக்கீம் குறிப்­பிட்­ட­தோடு, பெரும்­பான்மைச் சமூ­கத்தின் வாக்­கு­க­ளினால் மட்­டு­மல்­லாது சிறு­பான்மைச் சமூ­கங்­களின் வாக்­குப்­ப­லத்­தாலும் வெற்றி பெற்ற தூர­நோக்கு மிக்க ஜனா­தி­பதி அவ்­வாறு நடந்து கொள்ள மாட்டார் என்று நாங்கள் நம்­பு­கின்றோம் என்றார்.

இந்த விட­யத்தில் நான் குரலெழுப்பும் போது இனவாத அடிப்படையில் பேசுவதாக குற்றம் சாட்டுகிறார்கள். வேறு சில அடிப்படையே இல்லாத காரணங்களைக் காட்டுகிறார்கள். ஆனால், நாங்கள் இதனை விட்டுக் கொடுக்கப்பபோவதில்லை.

சமசமாஜக் கட்சி இலங்கையின் பழைமையான அரசியல் கட்சிகளில் ஒன்றாகும். அதனைச் சேர்ந்த அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரண இன்று (சனிக்கிழமை) காலை என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு எங்களுக்குச் சார்பாக இந்த விடயத்தில் தமது எதிர்ப்பையும் வெளியிட்டார் என்றும் அமைச்சர் ஹக்கீம் மேலும் குறிப்பிட்டார்.