Breaking News

தமிழக மீனவர்கள் 26 பேர் கைது!

பருத்தித்துறைக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்தனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 26 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் பாண்டிச்சேரி, காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களே நேற்று இரவு கைது செய்யப்பட்டனர். இதில் பாண்டிச்சேரி மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களது படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டது.

காரைக்கால் மீனவர்கள் 17 பேர் கைதாகினர். இவர்களது இரண்டு படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்படுவர் என்று தெரிவிக்கப்பட்டது.