Breaking News

பிளவுபடாத ஐக்கிய இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்பும் டயஸ்போராக்கள்

உலகத் தமிழர் பேரவையுடன் இடம்பெற்ற கலந்துடையாடல் இலங்கையில் தேசியத்தை கட்டியெழுப்ப உதவும் என வௌிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டுள்ளார். 

பிபிசிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

புலம்பெயர் சமூகத்தினரிடையே இலங்கையர் என்ற அடையாளத்தை உறுதிப்படுத்த அவர்களுடன் கலந்துரையாட வேண்டியது அவசியம் என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளதாகவும் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 

இலங்கை பிரஜைகள் குறித்து கவனம் செலுத்துவதோடு தமிழ் டயஸ்போராக்களுடன் கலந்துரையாடி அவர்களை ஈர்ப்பதும் முக்கியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பெரும்பான்மையான தமிழ் டயஸ்போராக்கள் பிரிக்கப்படாத ஐக்கிய இலங்கையுடன் இணைந்து செயற்பட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.