சூர்யாவை பாராட்டிய விஜய்!
நடிகர் விஜய் சிறந்த படங்களை எடுத்தவர்கள் மற்றும் அந்த படங்களில் சிறப்பாக நடித்தவர்களை நேரில் அழைத்து அவர்களுக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துக்களையும், பாராட்டுக்களை தெரிவிப்பார்.
அருள்நிதி நடிப்பில் வெளிவந்த ‘டிமான்ட்டி காலனி’ படத்தையும் பார்த்துவிட்டு இந்த படத்தை சிறப்பாக இயக்கிய இயக்குனர் அஜய் ஞானமுத்துவை பாராட்டினர்.
தற்போது, சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘மாசு என்கிற மாசிலாமணி’ படத்தை பார்த்துவிட்டு, அதில் சூர்யாவின் நடிப்பை பார்த்து ஆச்சர்யத்தில் உறைந்துபோன விஜய், அவருக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
பெரிய நடிகர்களுக்குள் எந்த ஈகோவும் இல்லாமல் விஜய், சூர்யாவை பாராட்டியது தமிழ் சினிமாவை நல்ல ஆரோக்கியமான நிலைக்கு கொண்டு செல்லும என கோலிவுட் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது.