Breaking News

ஜெ. மேன்முறையீட்டுக்கு அழுத்தம் கொடுத்த கருணாநிதிக்கு சீமான் கடும் எதிர்ப்பு

சொத்து குவிப்பு வழக்கில் ஜெய­ல­லிதா விடு­த­லையை எதிர்த்து கர்­நா­டகா அரசு மேன்­மு­றை­யீடு செய்ய வேண்­டு­மென தி.மு.க. தலைவர் கரு­ணா­நிதி தொடர்ந்து அழுத்தம் கொடுத்­த­மைக்கு நாம் தமிழர் கட்­சியின் தலைமை ஒருங்­கி­ணைப்­பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரி­வித்­துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும், தெரி­வித்­துள்­ள­தா­வது, தி.மு.க தலைவர் கரு­ணா­நிதி, முதல்வர் ஜெய­ல­லி­தாவின் சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பை எதிர்த்து மேன்முறை­யீடு செய்ய வேண்டும் என தொடர்ந்து வலி­யு­றுத்­தி­யமை தவ­றான செய­லாகும். சிறப்பு நீதி­மன்றம் தண்­ட­னையை விதிக்­கி­றது. உயர்­நீ­தி­மன்றம் தண்­ட­னையை நீக்கி விடு­தலை செய்­துள்­ளது. 

இதில் என்ன தவறு உள்­ளது?தி.மு.க தலைவர் கரு­ணா­நிதி செய்­யாத தவறு ஏதும் உண்டா? எத்­த­னையோ தவறுகள் செய்து ஊழலும் செய்­துள்ளார். எனவே அவர் முதல்வர் ஜெய­ல­லிதா வழக்கை மேன்­மு­றை­யீடு செய்ய சொல்­வது சரியல்ல. எனவே இந்த வழக்கை மேன்முறையீடு செய்யக்கூடாது என்றார்.