Breaking News

வித்தியா விவகாரத்தில் தொடர்புபட்ட பிரதான சந்தேக நபர் கைது

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரும் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப் பட்டுள்ளார்.

நயினாதீவைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டவராவார்.

நேற்றுமுன் தினம் கைதுசெய்யபட்ட இவரை, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவுக்கமைய குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் குழு தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வித்தியா கொலைக் குற்றத்தில் ஏற்கனவே கைதுசெய்யபட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள 9 பேரிடமும் குற்றப்புலனாய்வுப் பிரிவின் விசேட பொலிஸ் குழு விசாரணைகளை நடத்தியது. அவர்கள் கொடுத்த தகவலில் அடிப்படையிலேயே பிரதான குற்றவாளி கைதுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.