இலங்கையுடனான உறவு வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டை இந்தியா நிராகரிப்பு
இலங்கையுடனான இருதரப்பு உறவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லை என்ற குற்றச்சாட்டுக்களை இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் நிராகரித்துள்ளார்.
இந்தியாவில் நரேந்திர மோடி அரசாங்கம் பதவிக்கு வந்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு புதுடெல்லியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ்,
“மூன்று மாதங்களில் இரண்டு தரப்புகளிலும், நான்கு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூன்று மாதங்களில் நான்கு பயணங்கள் மேற்கொள்ளப்பட்டது வெளிப்படையானது. ஏனென்றால், வெளிப்படையான உறவுகளை வைத்துக் கொள்ள நாம் விரும்புகிறோம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.