Breaking News

வவுனியா அரச அதிபர் விவகாரத்தால் வட மாகாண சபையில் ஆர்ப்பாட்டம்

இடமாற்றம் செய்ய கோரி மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றப்பட்டும் இதுவரை அவரை இடமாற்றம் செய்யாததை கண்டித்து இன்றைய தினம் மாகாண சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

கைதடியில் உள்ள வட மாகாண பேரவை கட்டடத்தில் இன்றைய தினம் 30 ஆவது அமர்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. 

அதில் மாகாண சபையில் வவுனியா அரச அதிபரை மாற்ற கோரி பிரேரணை நிறைவேற்றப்பட்டு இதுவரை குறித்த அரச அதிபரை இடமாற்றம் செய்யப்படாததை கண்டித்து சபை அமர்வு ஆரம்பமானதும் உறுப்பினர்கள் தமது இருக்கைகளை விட்டு எழுந்து அவை தலைவர் முன்பாக சென்று சபை அமர்வினை ஆரம்பமாகதவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர் 

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா நேற்றைய தினம் பிரதமரை சந்தித்த போது, வவுனியா அரச அதிபரின் இடமாற்றம் தொடர்பில் கலந்துரையாடி இருப்பதனால் அது தொடர்பில் சாதகமான நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புவோம் என வட மாகாண சபை அவைத் தலைவர் சி.வீ.கே. சிவஞானம் தெரிவித்தமையை அடுத்து, உறுப்பினர்கள் தமது போராட்டத்தை கைவிட்டனர் 

அதனை அடுத்து தற்போது சபை அமர்வு ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.