Breaking News

கிழக்கில் நஸ்ரித்தான் என்ற முஸ்லிம் நாடு உதயமாகவுள்ளது

கிழக்கில் முஸ்லிம்களுக்கென நஸ்ரித்தான் என்ற புதியநாடு விரைவில் உருவாகும் என பிவி­துரு ஹெல உறு­ம­யவின் தலை­வரும் மேல் மாகாண சபை உறுப்­பி­ன­ரு­மான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்தே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் கருத்துவெளியிட்ட உதய கம்மன்பில, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் காலத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் கிழக்கின் கரையோரமாக முஸ்லிம்களுக்குத் தனியான நிர்வாக அலகு வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். 

இதனை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நிராகரித்திருந்தார்.அதன் பின்னரே முஸ்லிம் காங்கிரஸ் இப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தது. இப்போது முஸ்லிம்களுக்கான தனி நிர்வாக அலகு கோரிக்கையை நினைவுபடுத்தி முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஜனாதிபதிக்கு நினைவுபடுத்தல் கடிதமொன்றை எழுதியுள்ளார். 

இதற்கு முடிவு எட்டப்பட்ட பின்னரே பொதுத் தேர்தலில் ஆதரவு வழங்க முடியுமென முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்திருந்தது. இந்த விடயத்தில் என்ன முடிவு எடுக்கப்பட்டது என்பதை ஜனாதிபதி பகிரங்கப்படுத்த வேண்டும்.
இப்படியே போனால் கிழக்கில் நஸ்ரித்தான் என்ற புதிய முஸ்லிம் நாடு உதயமாகும் ஆபத்து உள்ளது- என்றார்.